சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது!

அதிமுக, திமுக கட்சிகளிடம் தேர்தல் விஷயத்தில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை

    சென்னை: சொன்னா நம்ப மாட்டீங்க பாஸ்! இது அப்படியே என்னவோ ஏற்கனவே சொல்லி வச்சு நடந்த மாதிரியே இருக்கு! இந்த தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அப்படி ஒரு ஒற்றுமை!

    திமுக, அதிமுக இரண்டு கட்சியுமே கூட்டணி முடிவு செய்து, தொகுதிகளை ஒதுக்கிவிட்டனர். அந்தந்த கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.

    ஆனால் தமிழகத்தின் இந்த இரு பெரும் கட்சிகளில் நடந்த சில ஒற்றுமை விஷயங்களை நாம் தான் இதுவரை சரியாக கவனிக்கவில்லை போல தெரிகிறது.

    கல்வி கடன் ரத்து.. நீட் தேர்வு ரத்து.. 7 பேர் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகல்வி கடன் ரத்து.. நீட் தேர்வு ரத்து.. 7 பேர் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

    உறுதிபட்டியல்

    உறுதிபட்டியல்

    கூட்டணி கட்சிகளுக்கு இரு தரப்புமே கறார்தன்மையை காட்டியது. இதனிடையே உத்தேச பட்டியல் ஒன்றும் இக்கட்சி சார்பில் லீக் ஆனது. ஆனால் உறுதி பட்டியல் வந்தபிறகுதான் தெரிகிறது இரு கட்சிகளுமே தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது!

    பாமக

    பாமக

    அதிலும் சீட் ஒதுக்கீட்டில் திமுக காங்கிரசுக்கு தாராளம் காட்டியது என்றால், அதிமுக பாமகவுக்கு தாராளம் காட்டியது. அதேபோல திமுகவிடம் ஒரு தலித் கட்சிதான் உள்ளது, அதிமுகவிடமும் ஒரே ஒரு தலித் கட்சி தான் இருக்கிறது.

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    திமுக 18 தொகுதி இடைத் தேர்தலில் போட்டி என்றால், அதிமுகவும் 18 தொகுதி இடைத் தேர்லில் போட்டியிடுகிறது. இதில், திமுக, அதிமுக இரண்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு சீட் கூட இடைத் தேர்தலில் தரவில்லை. (அன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களை நிறுத்த கோர்ட்டுக்கு போனதும் இந்த கட்சிகளே).

    ஆண்டிப்பட்டி

    ஆண்டிப்பட்டி

    இந்த இடைத்தேர்தலிலும்கூட ஆண்டிபட்டியில் ஒரே குடும்பத்தில் நுழைந்து அண்ணன், தம்பியை வேட்பாளராக நிறுத்தியதும் இக்கட்சிகள்தான். அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளர், என்றால் கொஞ்ச நேரத்திலேயே இவரது தம்பி லோகிராஜனை அதிமுக வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானது.

    பொதுவான திட்டங்கள்

    பொதுவான திட்டங்கள்

    அதேபோல, திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த அதே நாளில் அதிமுகவும் அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அதே நாளில் அதிமுகவும் வெளியிட்டது. அதிலும் பொதுவான சில திட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன.

    சுவாரஸ்யம்

    சுவாரஸ்யம்

    ஆக மொத்தம் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்று இந்த திராவிட கட்சிகளை நாம் லேசில் எடைபோட்டுவிடக்கூடாது போலும்! எப்படியோ, இதேமாதிரி அடுத்து என்ன சுவாரஸ்யம் நடக்கப் போகிறது என்பதைதான் பார்ப்போமே! சொல்லி வச்ச மாதிரியே.. ஹலோ அதிமுக, திமுக தலைமைகளே.. என்ன மேட்டர் ஓடிட்டிருக்கு உங்களுக்குள்ள!

    English summary
    There are many similarities between the ADMK and DMK Parities. Both parties announced candidates in the same day. Similarly, both parties have released their election manifesto on the same day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X