மக்களுக்கு திமுக மீது கோபம், அதிமுக மீது பாசம்! பயந்துபோய்தான் கிராம சபை கூட்டம் ரத்து: ஜெயக்குமார்
சென்னை: மக்களுக்கு திமுக மீது கோபமும் அதிமுக மீது பாசமும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

அண்ணா அறிவாலயம்
வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பூச்சி முருகன் இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கொரோனா பரவாதா? இதில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி பொதுமக்களுக்கு ஒரு நீதி என இருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது. பூச்சி முருகன் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு 500 முதல் 1000 பேர் வரை ஏராளமானோர் வருகை தந்தனர். சாதாரண மக்களுக்கு மட்டும் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்கிறார்கள்.

திமுக ஆட்சி
தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாகவும், காவல்துறை அராஜகம் அதிகரித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், நிலவி வருகிறது. மேலும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கின்றனர். மேலும் அதிமுக மேல் மக்கள் பெரும் பாசமாகவும் இருக்கின்றனர்.

கிராம சபை கூட்டம்
இதனால் உறுதியாக வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். கொரோனா பரவலை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை கூட்ட முடியாது என்கிறார்கள். கிராம சபை கூட்டம் கூடினால் பொங்கல் பரிசு ஊழல் வெளிப்பட்டு விடும். மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையிலேயே அச்சத்தால் கிராம சபை கூட்டத்தை திமுக அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொய் வழக்குகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எதற்கும் அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுக பயன்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம், நகர்ப்புற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.

பொங்கல் பரிசு
அனைத்து நியாய விலை கடைகளிலும் மக்கள் அரசை கழுவி ஊற்றுகின்றனர். பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத குப்பையில் போடும் பொருட்களை கொடுத்துள்ளனர். குப்பை தான் பொங்கல் பரிசா? பொங்கல் பரிசில் ரூ.500 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதற்காக சிபிஐ விசாரணை கேட்டு நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளோம். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உண்மை நிலை என்ன என்று அறிந்து தமிழக அரசு இதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications