• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுக எப்பவுமே அராஜகம்.. நூலிழையில் இந்த ஆட்சி அமைந்துள்ளது.. அதிமுக மாஜி அமைச்சர் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சியில் இருந்தாலும் அராஜகம், ஆட்சியில் இல்லாவிட்டாலும் அராஜகம் என்றால் அது திமுகதான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சசிகலா வருகையினால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் விஜயதசமி, சரஸ்வதிபூஜை வாழ்த்துக்கள்.. நாகை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.. பொதுவாக, கடலில் எல்லை என்பது கிடையாது, மீனவர்களும் வேண்டுமென்றே எல்லை மீறுவதும் கிடையாது.

காற்றின் வேகம், மீன்களின் ஓட்டம் இதனால்தான் மீறப்படுகிறது. அப்படியே மீறினாலும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதே சிறந்த தீர்வு. ஆனால், மாறாக படகுகளை சேதப்படுத்துவது, கற்களை வீசுவது, மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஐஸ் வைத்த பிரியங்கா...அல்வா கொடுத்த தாமரை...வேற லெவல் தான் நீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள் ஐஸ் வைத்த பிரியங்கா...அல்வா கொடுத்த தாமரை...வேற லெவல் தான் நீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்

மீனவர்கள்

மீனவர்கள்

கடந்த அம்மாவின் ஆட்சியில் இந்த தாக்குதல் எல்லாம் வெகுவாக குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர் கதையாக இருக்கிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்குரிய நிலைமையை ஏற்படுத்தி தர வேண்டும். இலங்கை - இந்தியா - மீனவர்கள் என முத்தரப்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் சமீபகாலமாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டத்தை, அதை நடத்த வேண்டும். இதை மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

 சின்னம்

சின்னம்

அதிமுக இன்றைக்கு 50 ஆண்டுகளை தொட்டுள்ளது.. எத்தனையோ சோதனைகளை தாண்டி சாதனைகளாக படைத்துள்ளது இந்த இயக்கம். டாக்டர் எம்ஜிஆர் பல நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு தந்தவர்.. அவரது மறைவுக்கு பிறகு, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் கட்சிக்கு கொண்டு வந்து, அதன்மூலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா அவர்கள் தந்தார்கள். 2 முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக. பொன்விழா மட்டுமல்ல, பவள விழா, நூற்றாண்டு விழாவும் காணும்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சசிகலா அதனால் ஒரு பலனும் ஏற்பட போவதில்லை.. வீண் முயற்சி அது.. டிடிவி தினகரன் ஆரம்பித்த அமமுக, எந்த அளவுக்கு தேர்தலில் போட்டியிட்டு, செலவு செய்து அதன்மூலம் மண்ணை கவ்வினார்கள் என்பது வரலாறு.. எவ்வளவுதான் குட்டி கரணம் போட்டாலும், அது எடுபடாத தருணமாக இருக்கும். நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? அதிமுக சரியாக வழிநடத்தப்பட்டு வருகிறது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே ஒன்றுபட்டு இயங்கி கொண்டிருக்கிறார்கள்..

 அம்மா

அம்மா

சசிகலா அங்கே போனால், இங்கே போனால் என்ன? கவலை இல்லை.. அம்மா அம்மாதான், மற்றதெல்லாம் சும்மா. நானும் அம்மாதான்னு சொல்லிட்டு வந்தால், மற்றவர்கள் எல்லாம் கேலியாக சிரிக்க கூடிய நிலைமைதான் ஏற்படும். இன்னைக்கு வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.. அமமுக அப்படியா? சசிகலாவையும் தினகரனையும் பிரிக்க முடியுமா? அப்படி இருக்கும்போது, கட்சியை கைப்பற்றுவேன்னு சொல்வதால் எந்த பலனும் இல்லை.. எந்த பாதிப்பும் அதிமுகவுக்கு இருக்காது.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

அதிமுக தொண்டர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.. இணை கழக செயலாளர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒன்றிய, பேரூர், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க எந்த தீய சக்தியாலும் முடியாது. தீய சக்தி என்றால் தமிழகத்தில் இரண்டு உள்ளது. ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா சான்றோர்கள். சசிகலாவுக்கு பாதுகாப்பு தருவது, தராமல் போவது அரசாங்கத்தின் நிலை.. அதை பற்றி நான் கருத்து சொல்ல மாட்டேன்.. ஆனால் சசிகலா செல்வதால் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது..

 சசிகலா

சசிகலா

அவர்களை பற்றி பேசி பெரிய நபராக வளர்க்க விரும்பவில்லை.. எங்களை பொறுத்தவரை, பொதுச்செயலாளர் கட்சி கொடியோ, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரையோ சசிகலா பயன்படுத்த கூடாது.. இது சட்டம்.. இதை தேர்தல் ஆணையம், நீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பு தந்தாகிவிட்டது.. அதையும் மீறி செய்தால் சட்டத்தை மீறும் செயலாகவே கருதப்படும்.. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அமமுக எவ்வளவு சதவீதம் வாங்கியது? ஒருசீட்கூட இல்லை.

அதிமுக

அதிமுக

ஆனால், அதே சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் வாங்கி உள்ளோம். அப்படியென்றால், அதிமுக எந்த பிரச்சனையும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இந்த கணக்குகூட தெரியாமல் பேசுவது நகைப்புக்குரியது. மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜியை அனைவரும் அணில் என்று கூப்பிடுகிறார்கள்.. நான் அப்படி கூப்பிட மாட்டேன்.. ஒரு நொடிகூட மின்சாரம் தட்டுப்பாடு இருக்காது என்றார்..

 வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது என்ன ஆனது? செல்போனில் லைட் அடித்து வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லையா? உண்மைக்கு மாறான விஷயங்களைதான் அவர்கள் சொல்கிறார்கள். இப்படி தினம் தினம் மின்சார தட்டுப்பாடு இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஒரு சதவீதம்தான் வித்தியாசம் எங்களுக்கும் திமுகவுக்கும்.. மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதுபோல, மயிரிழையில் ஆட்சி அமைத்துள்ளார்கள்.. உள்ளாட்சி தேர்தலிலும் அப்படித்தான்..

திமுக

திமுக

ஆட்சியில் இருந்தாலும் அராஜகம், ஆட்சியில் இல்லாவிட்டாலும் அராஜகம் என்றால் அது திமுகதான்.. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்தினோம். அதனால் ஆரோக்கியமான போட்டி இருந்தது. இன்னைக்கு 85 சதவீதம் ஒன்றிய கவுன்சிலர் சதவீதம் எடுத்துள்ளது.. மாவட்ட கவுன்சிலில் 99 சதவீதம் திமுகவாம்.. நாங்கள் ஒரு சதவீதமா?

 வாக்குச்சீட்டு

வாக்குச்சீட்டு

எதுக்கு மாநில தேர்தல் ஆணையத்தை வைத்து தேர்தல் நடத்துறீங்க? பேசாமல் உங்க தொண்டர்களை வைத்தே நிரப்பி வாக்குசீட்டை போட்டுவிட வேண்டியதுதானே.. அதர்மத்துக்கு கிடைத்த வெற்றி இது. எத்தனையோ புகார்களை தந்தோம்.. தேர்தல் ஆணையம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கோர்ட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளவில்லை. ஜனநாயகத்தை படுகொலை செய்த கட்சி திமுக. எங்களை பொறுத்தவரை சட்டம் என்று ஒன்று உள்ளது.. என்ன செய்வது என்பதை கட்சி முடிவு செய்யும்..

English summary
ADMK Ex Minister Jayakumar says about Sasikala and DMK Government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X