சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும்... ஒரே நாளில் 2 பேர் போர்க்குரல்..!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

திடீருன்னு அதிரடி காண்பிக்கும் பாகிஸ்தான் டீம்.. வரிசையாக வெற்றிகள்.. பின்னணியில் 6 காரணங்கள்! திடீருன்னு அதிரடி காண்பிக்கும் பாகிஸ்தான் டீம்.. வரிசையாக வெற்றிகள்.. பின்னணியில் 6 காரணங்கள்!

மேலும், அதிமுகவுக்கு சசிகலா அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் ஒருவர் தலைமையேற்க வேண்டும் என தனது விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார்.

சரிவுப்பாதை

சரிவுப்பாதை

அதிமுக தொடர்ந்து சரிவுப்பாதையில் செல்வதால் ஓருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும் பெங்களூரு புகழேந்தி தெரிவித்திருக்கிறார். தன்னை முதல்வராக்கிய போது நல்லவராக தெரிந்த சசிகலா, இப்போது கெட்டவராக தெரிகிறாரா என எடப்பாடி பழனிசாமிக்கு பெங்களூரு புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 தோல்வி

தோல்வி

மேலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கே.பி.முனுசாமி போன்றவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது தான் மிச்சம் எனவும் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தலை எடுத்தாலும், எடப்பாடி பழனிசாமியின் முகத்தை பார்த்து மக்கள் ஓட்டளிக்கவே இல்லை எனவும் விமர்சித்திருக்கிறார்.

அதிகாரம் யாருக்கு

அதிகாரம் யாருக்கு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த ரோலும் கிடையாது என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பி.எஸ். வர வேண்டும் என இவர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், கூட்டணிக் கட்சியான பாமகவை விமர்சித்துவிட்டார் என்ற காரணத்துக்காக அதிமுகவிலிருந்து பெங்களூரு புகழேந்தி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 2 பேர் எதிர்ப்பு

2 பேர் எதிர்ப்பு

இதனிடையே பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து அதிமுக சிறுபான்மை நல பிரிவு நிர்வாகி பஷீர், எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பேட்டி கொடுத்து பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இவர் இப்படி பேட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தனிக்கதை. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரே நாளில் இரண்டு பேர் போர்க்குரல் எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

English summary
Admk Ex Spokesperson Bangalore pugazhendhi criticize Edappadi palanisami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X