சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வமும் நான் தான்... ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்... அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..!

Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

மேலும், அவர்கள் இருவரது முகமூடிகளை அணிந்து கொண்டு 15 வயது முதல் 20 வயது வரையிலான சிறுவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையின் இரு மருங்கிலும் நின்றார்கள்.

அதிமுக செயற்குழு: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் முயற்சி மீண்டும் தோல்வி

முதல்வர் டாப்கியர்

முதல்வர் டாப்கியர்

அதிமுக செயற்குழு கூட்டமானது வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கட்சியின் புரோட்டகால் படி பார்த்தால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். தான் எம்.ஜி.ஆர்., ஜெ. படத்துக்கு முதலில் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரை ஓரங்கட்டி இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்துக்கு முதல் நபராக மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சூசகமாக உணர்த்திய இ.பி.எஸ்.

சூசகமாக உணர்த்திய இ.பி.எஸ்.

இந்தக் காட்சி மூலம் ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை இ.பி.எஸ். உணர்த்தியிருந்தார். இதனை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் கவனிக்காமல் இல்லை. மேலும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் பாதிக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும். முதல்வருக்கு பாராட்டு, தமிழக அரசுக்கு பாராட்டு என வார்த்தை ஜாலங்களால் தீர்மானங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இதுவும் ஓ.பி.எஸ். தரப்பிற்கு மைனஸாகவே கருதப்படுகிறது.

பூங்கொத்து

பூங்கொத்து

இதனிடையே செயற்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ்.க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவில்லை. ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் மற்றும் முன்னாள் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாபு ஆகியோர் மட்டுமே வரவேற்றனர். அதேவேளையில் அங்கு வந்த முதல்வர் இ.பி.எஸ்.க்கு அதிமுக மகளிரணி நிர்வாகிகள் மொத்தமாக திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கீர்த்திகா முனுசாமி, விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட பலரும் பூங்கொத்து அளித்து வரவேற்பு கொடுத்தனர்.

உடல்நலக் குறைவு

உடல்நலக் குறைவு

அதிமுக செயற்குழு அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவு காரணமாகவும் வயது முதிர்வால் கூட்ட நெரிசல் மிக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற ஐயத்தின் காரணமாகவும் அவர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்டுவதற்காக பலப்பரீட்சையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முடிவு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Admk Executive Committee Interesting Facts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X