• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"எகிறி அடிக்கும் ஸ்டாலின்".. மொதல்ல தேமுதிக.. அடுத்து மநீம.. அப்பறம் அமமுக.. இப்ப அதிமுக.. ஒரே ஜம்ப்

Google Oneindia Tamil News

சென்னை: முதலில் தேமுதிக, பிறகு மநீம, அப்பறம் அமமுக.. இப்பேலாது அதிமுக.. என மெகா புள்ளிகள் திமுக பக்கம் தாவி கொண்டிருக்கிறார்கள்.. இதையெல்லாம் பார்த்து பாஜகவும், அதிமுகவும் விழித்து கொண்டிருக்கின்றன..!

பதவியேற்றதில் இருந்தே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு முனைப்பு காட்டி வந்து கொண்டிருக்கிறது.. அதிரடியாக லாக்டவுனை போட்டதுடன், மக்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை தேவைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு வருகிறது.

7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

இப்போது மெல்ல மெல்ல தொற்று குறைந்து வருகிறது... அதற்கேற்றபடி தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன..!

 திமுக அரசு

திமுக அரசு

திமுக அரசு பதவியேற்ற போது, தொற்று பரவல் பிரச்சனை, திமுக அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது.. எதிர்க்கட்சிகளின் எந்தவித விமர்சனத்துக்கும் ஆளாகாமல், ஸ்டாலின் அரசு சிறப்புடன் ஆட்சி நடத்தி வருவது, மாற்று கட்சி சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில், பல கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்..

 ஆர்வம்

ஆர்வம்

ஏற்கனவே தேமுதிகவில் பல நிர்வாகிகள் திமுகவில் இணைய ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வந்தன.. ஆனால், முதல்வர்தான், நண்பர் விஜயகாந்த் மனம் புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவினை திமுக மாசெ.க்களுக்கு பிறப்பித்த நிலையில், தேமுதிகவினர் திமுகவில் இணைய முடியாமல் போய்விட்டது.

 கமீலா நாசர்

கமீலா நாசர்

அதேபோல, மநீம..வில் இருந்து விலகிய கமீலா நாசரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ட்வீட் போட்டிருந்தார்.. எனவே, இவரும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அதேபோல, அமமுக நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ளார்... அவர் மூலமாக பிற அமமுக தலைவர்களுக்கும் திமுக குறிவைத்து வருவதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது..

 கவுன்சிலர்கள்

கவுன்சிலர்கள்

இப்போது புது தகவல் என்னவென்றால், தேமுதிக, மநீம, அமமுகவை தாண்டி, அதிமுகவில் இருந்தும் திமுகவுக்கு புள்ளிகள் தாவி வருகின்றனர்.. அந்த வகையில், கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தும் உள்ளனர்..

இணைப்பு

இணைப்பு

கடவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன், அதிமுக கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், 10 அதிமுக மாஜி கவுன்சிலர்கள் லோகநாதன், ரவிச்சந்திரன், முருகன், கோமதி பிரபாகர், மகாலட்சுமி சின்னதுரை, நிர்மலா அழகர், தவமணி காளிதாஸ், சரோஜா சின்னசாமி, தனம் பாலகிருஷ்ணன், தாந்தோணி, ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி சரவணன் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள், கூண்டோடு திமுக பக்கம் இணைந்துவிட்டனர். அதாவது அங்கு இருப்பதே 13 மாஜி கவுன்சிலர்கள்தானாம்.. இதில் 11 பேர் திமுக பக்கம் வந்துவிட்டனர்.

 தங்க தமிழ்செல்வன்

தங்க தமிழ்செல்வன்

இந்த அதிமுக மாஜி கவுன்சிலர்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதற்கெல்லாம் பின்னணி காரணம் அமைச்சர் செந்தில்பாலாஜி என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.. ஏற்கனவே இப்படித்தான், 2 வருடத்துக்கு முன்பு தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணையும்போது, "உண்மையான அதிமுக தொண்டர்கள், திமுக பக்கம் வந்துவிடுங்கள்" என்று ஒரு அறைகூவல் விடுத்திருந்தார்.. அதன்படியே தேனி அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவிலும் இணைந்தனர்..

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

அதுபோலவே, இப்போது செந்தில் பாலாஜியும் காய்நகர்த்தலை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.. கரூர் மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று, கடந்த சில தினங்களாகவே முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், அதிமுக தலைமையிடம் தெரிவித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில் கரூர் முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைவது, அதிமுகனை அதிர்ரச்சிக்குள்ளாக்கி வருகிறது.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் தேமுதிக கரைந்துவருகிறது.. கமல் செய்த குழப்பத்தினால், மநீம மங்கி வருகிறது.. தினகரன் ஒதுங்கியே அரசியல் செய்து வருவதால், அமமுக செயலற்று வருகிறது.. உட்கட்சி பூசல் அடங்காமல் பற்றி எரிவதால், அதிமுக தத்தளித்து வருகிறது.. இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு சிக்கலில் உள்ளதால், அனைவரின் கவனமும் திமுகவை குறி வைத்து நகர்ந்து வருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
ADMK Executive joined in DMK due to CM Stalins Performance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X