தேதி குறிச்சாச்சு இடமும் பார்த்தாச்சு போலயே?.. அதிமுக பொதுக் குழு கூட்டம் எங்கு நடக்கிறது தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் எங்கு நடத்துவது என்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த 23 ஆம் தேதி கூடியது. இந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கும் தனித்தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டு வருவதை ஓபிஎஸ் அறிந்தார்.
கர்நாடகாவில் 3-வது நாளாக பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு- மக்கள் கடும் அச்சம்
இதையடுத்து அந்த பொதுக் குழு கூட்டம் நடக்கக் கூடாது என்பதற்காக அதை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனாலும் அது நடைபெறவில்லை. அதிமுக பொதுக் குழுவை நடத்தி கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இரவோடு இரவாக
இதையடுத்து இரவோடு இரவாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. அப்போது ஓபிஎஸ் கையெழுத்திட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து.

ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பிடிப்பு
ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பிடிப்பு கிடைத்தது. அன்று காலை பொதுக் குழுவுக்கு மிகவும் சந்தோஷமாக சென்றார். ஆனால் அவர் அங்கு அவமானப்படுத்தப்பட்டார். ஒருங்கிணைப்பாளரான தன்னை கேட்காமலேயே அடுத்த பொதுக் குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தது ஆகியவற்றால் கோபமடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

ஜூலை 11 ஆம் தேதி
இந்த நிலையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழுவை நடத்தவிடாமல் செய்ய ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் அன்றைய தினம் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகமாக இருக்கிறது.

இடம் தேர்வு செய்ய ஆயத்தம்
இந்த நிலையில் பொதுக் குழுவை எங்கு நடத்துவது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடம் தேடி வருகிறார்களாம். முதலில் மீனம்பாக்கம் அருகே பார்த்தனர். மேலும் சில திருமண மண்டபங்களை அணுகிய போது ஜூலை 11 ஆம் தேதி திருமணம் உள்ளிட்ட முகூர்த்தங்கள் இருப்பதாக மண்டப உரிமையாளர்கள் சொல்கிறார்களாம்.

விஜிபி ரிசார்ட்டா?
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் விஜிபி ரிசார்ட்டில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு நேற்றைய தினம் நிர்வாகிகள் போய் ஆய்வு செய்துள்ளனர். அந்த இடத்திலேயே பொதுக் குழு கூட்டத்தை நடத்திவிடலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை.