சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக பொதுக்குழு! எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    பன்னீர் இப்போ கண்ணீர் செல்வம்.. சுயநலவாதி ஓபிஎஸ்.. இப்படி செய்யலாமா? போட்டுத்தாக்கிய ராஜன் செல்லப்பா

    அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக பொறுப்பேற்க வைக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு ஓ பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என கூறி வருகிறார்.

    காலையில் கிழிப்பு... மாலையில் மாற்றம்... அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் படத்துடன் புதிய பேனர்காலையில் கிழிப்பு... மாலையில் மாற்றம்... அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் படத்துடன் புதிய பேனர்

    உச்சநீதிமன்றத்தில் மனு

    உச்சநீதிமன்றத்தில் மனு

    இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே தான் ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன.

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    இந்த மனு மீது ஜூன் 22ல் விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வழக்கறிஞர்கள் பரபரப்பான வாதங்களை முன்வைத்தனர். விடியவிடிய நடந்த விசாரணையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இதனால் வழக்கு விசாரைண அனல் பறந்தது. இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிமன்றம் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தரவித்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டது.

    ஈபிஎஸ் அணிக்கு பின்னடைவு

    ஈபிஎஸ் அணிக்கு பின்னடைவு

    இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

     ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

    ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

    இந்த பொதுக்குழுவிலும் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றவிடாமல் தடுப்பதில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இன்று கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    ADMK General Council: O Panneer Selvam Filled Caveat Petition In Supreme Court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X