சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலர்கள்.. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பரபரப்பு புகார்!

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் அலுவலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக அ.தி.மு.க புகார் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதற்கு அ.தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒரே கட்டமாக தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஏற்கனவே மனு அளித்து இருந்தது.

கோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச்கோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச்

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு

உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முறைகேடு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக புகார் கொடுத்துள்ளது. அ.தி.மு.க சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆர். எம். பாபு முருகவேல் கொடுத்துள்ள அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

தள்ளுபடி செய்திருக்கிறது

தள்ளுபடி செய்திருக்கிறது

நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேர்மறையாக இந்த தேர்தலை சந்திக்க திராணி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகம், அரசு எந்திரத்தை பயன்படுத்தி 9 மாவட்டங்களில் பல இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி செய்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாக..

சட்டத்திற்கு புறம்பாக..

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஒன்றியக்குழு உறுப்பினர்களுடைய மனுக்களையும், தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய மனுவையும், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சொல்லி இருக்கக் கூடிய காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கக்கூடிய வாக்காளர் வேறு ஒரு வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கிறார் என்று வேட்பு மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

தேர்தல் விதிகள் எங்கே?

தேர்தல் விதிகள் எங்கே?

ஆனால், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்துச் சென்று நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு தான் முன்மொழிந்து இருக்கிறேன் வேறு யாருக்கும் முன்மொழியவில்லை என்று சொன்னாலும், அந்த முன்மொழிந்த வாக்காளரின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இல்லை.இது ஏதோ திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, தேர்தல் விதிகளுக்கு மாறாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்

நடவடிக்கை

நடவடிக்கை

இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறுகின்ற பட்சத்தில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இடத்திலே புகார் மனுவை அளித்து இருக்கிறேன். அந்த புகார் மனுவை முழுவதுமாக படித்து பார்த்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கருத்துரு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

English summary
The ADMK has complained that election officials are acting in favor of the DMK in the local elections. Local elections are being held in two phases in 9 districts in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X