சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பத்தில் விறுவிறு.. கடைசியில் ஜவ்விழு.. களேபரமான அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியலில் இன்னமும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி

    சென்னை: யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. கூட்டணி அறிவிப்பு, தைலாபுர விருந்து, விஜயகாந்த் வீடு, என அடுத்தடுத்து நிகழ்வுகள் வேகவேகமாக நடக்க.. வேட்பாளர்கள் அறிவிப்பிலோ அப்படியே தலைகீழ் தாமதமாகி விட்டது!

    திமுகவுக்கு முன்பே கூட்டணியை அறிவித்துவிட்டது அதிமுக. தேமுதிக வந்தால் வரட்டும், வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு அதிமுக தலைமை இருந்தது. இதற்கெல்லாம் காரணம் மெகா கூட்டணி வைத்துள்ளோம் என்ற கெத்துதான்!

    ஆனால் அதே மெகா கூட்டணியால்தான் இன்றைக்கு வேட்பாளர்களை ஒன்றாக சேர்ந்து அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.

    முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா? முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?

    எச்.ராஜா

    எச்.ராஜா

    கூட்டணி தொகுதி முடிவாகும்போது இருந்த ராமதாசும், அதன்பிறகு வழிக்கு வந்த விஜயகாந்த்தும் நேற்று வேட்பாளர் அறிவிப்பின்போது மிஸ்ஸிங்! ஆனால் கூட்டணி முடிவாகும்போது வரவே கூடாது என்று கண்டிஷன் போட்ட எச்.ராஜா நேற்று ஆஜர்!

    தேமுதிக

    தேமுதிக

    பாமக, தேமுதிக சார்பில் முக்கிய நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அதிமுக கூட் டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் கூட்டணி இழுபறி நிலைமைக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. நேற்றெல்லாம் கூடி பேசினார்கள்.. ஆனால் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியே வரவில்லை.

    அனுமதிக்கவில்லை

    அனுமதிக்கவில்லை

    நேற்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், பரிதாபம் அதிமுக அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. அதிமுக அலுவலகத்தை பூட்டிக்கொண்டு, ஆலோசனையை நடத்தினார்கள்.

    5 வேட்பாளர்கள்

    5 வேட்பாளர்கள்

    கடைசியில் ராத்திரி 10 மணிக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இப்படி அறிவித்துவிட்டு, வேட்பாளர் பட்டியல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமலே சென்றுவிட்டனர். அதற்கு பிறகு 5 வேட்பாளர்களின் பெயரை ராமதாஸ் வெளியிட்டார். தூத்துக்குடிக்கு பாமகவுக்கு யாரும் செட் ஆகவில்லை போலும்! அங்கேதான் கூட்டணியின் தமிழிசை நிற்கிறாரே, பிறகு யாரை கொண்டு போய் எதிராக நிறுத்துவார் ராமதாஸ்!

    மிஸ்ஸிங்!

    மிஸ்ஸிங்!

    பாமக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை.. கள்ளக்குறிச்சியை தவிர மீதி 3 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு பலம் இல்லை... இப்படி இரு தரப்புமே இன்னமும் சமாதானம் ஆகாமல் இருக்கிறார்கள். அதனால் திரும்பவும் விஜயகாந்த் வீட்டுக்கு தலைவர்கள் படையெடுக்க வாய்ப்பு உள்ளது. "உடல்நிலை" குறித்து விசாரிக்கத்தான்!

    ஆக.. இன்று அல்லது நாளை விரைவில் எல்லா உட்பூசலும் தீர்ந்து சுபமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    English summary
    There is a problem of announcing coalition candidates in ADMK. Today's or tomorrow's problems are expected to be adjusted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X