சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

BREAKING NEWS LIVE: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய இடைக்கால தடை

சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராடும் நிலையில் அப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராடும் நிலையில் அப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளதால் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மதிய காட்சியில் இருந்து வழக்கம் போல அனைத்து தியேட்டர்களிலும் படம் ஓடும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

ADMK holding protest against Vijays Sarkar film- LIVE UPDATES

Newest First Oldest First
3:04 PM, 9 Nov

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்- ஹைகோர்ட் நீதிபதி கருத்து

தணிக்கை சான்றிதழ் வழங்கிய படத்திற்கு எதிர்ப்பு ஏன்? நீதிபதி கேள்வி

3:01 PM, 9 Nov

ஏ.ஆர்.முருகதாசை 27ம் தேதிவரை கைது செய்ய தடை

முன்ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி

2:38 PM, 9 Nov

சர்கார் பிரச்சினை - அமைதி காக்க ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
1:26 PM, 9 Nov

முதல்வரை சந்திக்க விஜய் நேரம் கேட்கவில்லை- கடம்பூர் ராஜு
1:24 PM, 9 Nov

சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது- அமைச்சர் கடம்பூர் ராஜு

முதல்வரை சந்தித்து ஆலோசித்த கடம்பூர் ராஜு தகவல்

12:39 PM, 9 Nov

நடிகர் விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு பாதுகாப்பு

சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராடும் நிலையில் பாதுகாப்பு

12:00 PM, 9 Nov

சர்கார்: சேலம் ஏஆர்ஆர்எஸ் தியேட்டர் முன் பதற்றம்

அதிமுகவினர் தியேட்டர் முன் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

அதிமுகவினர் சர்கார் பட பேனர்களை கிழித்து சாலையில் வீசினார்கள்

சர்காரில் சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்பும் கூட அதிமுகவினர் எதிர்ப்பு

11:48 AM, 9 Nov

சர்கார் பட பிரச்சினை தீர்ந்தது

சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கம்

வழக்கம் போல அனைத்து தியேட்டர்களிலும் படம் ஓடுகிறது

திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தகவல்

11:46 AM, 9 Nov

காட்சிகளை நீக்குவதாக கூறிய பிறகும் நிற்காத போராட்டம்

சர்கார் பட பேனர்களை கிழித்து சேலத்தில் அதிமுகவினர் போராட்டம்

11:46 AM, 9 Nov

சர்கார் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யும் பணி துவங்கியது
11:18 AM, 9 Nov

முன் ஜாமீன் கேட்டு இயக்குநர் முருகதாஸ் ஹைகோர்ட்டில் மனு

இன்று மதியமே முருகதாஸ் மனு மீது விசாரணை

11:18 AM, 9 Nov

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதற்காக நன்றி: அமைச்சர் உதயகுமார் பேட்டி
11:17 AM, 9 Nov

சர்கார் பேனர்: விஜய் ரசிகர்கள் 56 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்கு பதிவு

தஞ்சாவூரில் 25 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு

திருவாரூரில் 21 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு

கரூரில் 10 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு

English summary
ADMK holding protest against Vijay's Sarkar film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X