சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே அடிதான்.. சர்வேவை பார்த்து கவலையே இல்லை.. இபிஎஸ் சொன்ன வார்த்தை.. உண்மையில் செம "கட்ஸ்"!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியான நிலையில்.. இந்த கருத்து கணிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று அசால்ட்டாக பேட்டி அளித்தார். இது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளை சிரித்துக்கொண்டே எதிர்கொண்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்று டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே வெளியானது. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரப்போவது என்று மக்களிடம் டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே மூலம் கருத்து கணிப்பு செய்யப்பட்டது .

டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பின்படி சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதிமுக அணிக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி

பேட்டி

நேற்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை நடத்திக்கொண்டு இருந்த போதுதான் இந்த சர்வே வெளியானது. இந்த நிலையில் சர்வே குறித்த முதல்வரிடம் கேள்வி கேட்கப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? இதை உங்களுக்கு பின்னடைவாக பார்க்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

கருத்து

கருத்து

நீங்கள்தான் கருத்தை போடுகிறீர்கள்.. நீங்கள்தான் இதை பற்றி சொல்ல வேண்டும்.அதிமுக மிகவும் வலிமையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

10 வருடம்

10 வருடம்

கடந்த 10 வருடங்களாக நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களின் திட்டங்களால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளனர். சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அதிமுக அரசின் மீது இருந்த நம்பிக்கை காரணமாகவே விக்கிரவாண்டி , நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியை பெற்றது.

செல்வாக்கு

செல்வாக்கு

அதிமுகவின் செல்வாக்கை இந்த வெற்றி பறைசாற்றுகிறது. இதேபோல் சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது போலவே இதிலும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைப்போம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொன்னான ஆட்சியை தொடர்வோம் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிரடி

அதிரடி

நேற்று வெளியான கருத்து கணிப்பு திமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும் கூட அதிமுக அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. கருத்து கணிப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது , இதை எல்லாம் தலையில் ஏற்றுக்கொள்ள கூடாது .. களநிலவரம் வேறு மாதிரி இருக்கும். களத்தில் வேலை பார்த்து வெற்றி எளிது என்று முதல்வர் பழனிச்சாமி நம்புகிறார்.

அசால்ட்

அசால்ட்

இதனால்தான் கருத்து கணிப்பு குறித்த கேள்விகளை மிகவும் எளிதாக அசால்ட்டாக முதல்வர் எதிர்கொண்டு இருக்கிறார். அதிமுக தலைவர்களும் இதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை என்கிறார்கள். தேர்தல் பணிகளை கவனிப்போம், வன்னியர் இடஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, நலத்திட்ட அறிவிப்பு என்று சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கிறது.

சாதகம்

சாதகம்

இதனால் தேர்தல் மீது மட்டும் கவனம் செலுத்துவோம் என்று அதிமுக தொண்டர்களும் கருதுகிறார்கள். தீவிரமாக களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வரும் அதிமுக இன்னும் சில நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கும். அதிகபட்சம் 11ம் தேதிக்குள் திமுக அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துவிடும் என்று கூறப்படுகிறது .

English summary
ADMK is not at all worried about Pre Poll survey says CM E Palanisamy ahead of Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X