சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

AIADMK Meeting: அதிமுகவில் அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் யார்? என அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Newest First Oldest First
5:58 PM, 28 Sep

நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்
3:13 PM, 28 Sep

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7-ல்அறிவிப்பு - கே.பி. முனுசாமி. ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து அக்டோபர் 7-ல் கூட்டாக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பார்கள்- கே.பி. முனுசாமி.
3:12 PM, 28 Sep

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன- கே.பி. முனுசாமி
3:12 PM, 28 Sep

அதிமுக செயற்குழுவுக்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேட்டி
2:47 PM, 28 Sep

5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது
11:26 AM, 28 Sep

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
11:07 AM, 28 Sep

அதிமுக செயற்குழு: முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கும் முயற்சி மீண்டும் தோல்வி
10:51 AM, 28 Sep

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம். தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி.நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தீர்மானம். அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் பெரும்பாலானவை முதல்வரை பாராட்டி தீர்மானம்.
10:48 AM, 28 Sep

கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.
10:42 AM, 28 Sep

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10:16 AM, 28 Sep

அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கியது
10:14 AM, 28 Sep

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு பூ மழை பொழிந்து வரவேற்ற ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ். காரை விட்டு இறங்கியதும் நேராக ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்று மரியாதை செலுத்தினார்.
10:11 AM, 28 Sep

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ்.க்கு பூரண கும்ப மரியாதை. ஓ.பி.எஸ்.க்கு ஆளுயர மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கம்.
10:10 AM, 28 Sep

ஓபிஎஸ்-க்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு
10:09 AM, 28 Sep

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை- ஆதரவாளர்கள் முழக்கம்
9:51 AM, 28 Sep

2021-ல் மீண்டும் முதல்வர்- சாமானியர்களின் முதல்வர் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்
9:42 AM, 28 Sep

2021-ல் மீண்டும் முதல்வர் எடப்பாடியார் என்கிற பதாகையை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பிடித்து வருகின்றனர். மும்முறை முதல்வரே! அம்மாவின் வாரிசே! என்கிற பதாகையை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கையில் ஏந்தி நிற்கின்றனர்.
9:42 AM, 28 Sep

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தி நிற்பதால் பதற்றம். ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்தபடி அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். ஈபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி ஆதரவாளர்கள் முழக்கம்.
9:39 AM, 28 Sep

அதிமுக செயற்குழுவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
9:28 AM, 28 Sep

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18-ந் தேதி உயர்நிலைக் கூட்டத்தில் காரசார விவாதம். உயர்நிலைக் கூட்டதிதில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளே இன்றும் செயற்குழுவில் பேசப்படலாம்.
9:26 AM, 28 Sep

செல்போன்களை பயன்படுத்தாத வகையில் செயற்குழு கூட்டத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது
9:17 AM, 28 Sep

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு. முதல்வரையும் அமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்து வருகிறார்கள்.
9:15 AM, 28 Sep

அதிமுக செயற்குழு தொடர்பாக 2 மூத்த அமைச்சர்கள் அண்மையில் டெல்லி சென்று ஆலோசனை
9:15 AM, 28 Sep

பொதுச்செயலாளர் பதவி ஓபிஎஸ்-க்கு; முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்- என்கிற பார்முலாவை இன்றைய செயற்குழு பரிசீலிக்க கூடும்
9:12 AM, 28 Sep

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சந்திப்பு. ஏற்கெனவே கடம்பூர் ராஜூ சந்தித்த நிலையில் துரைக்கண்ணுவும் சந்திப்பு.
9:12 AM, 28 Sep

ஓபிஎஸ் அணியினர் வழிகாட்டுதல் குழுவை அமைக்க செயற்குழுவில் வலியுறுத்தக் கூடும்
9:11 AM, 28 Sep

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை. கொரோனா சோதனை மேற்கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் முகமூடியை அணிந்து வந்த நிர்வாகிகளால் பரபரப்பு .
9:11 AM, 28 Sep

15 அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு. அதிமுக செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு.
9:10 AM, 28 Sep

சென்னை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்பு. செயற்குழு நடைபெறும் நிலையில் முதல்வருடன் அமைச்சர் சந்திப்பால் பரபரப்பு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சந்திப்பு. ஏற்கெனவே கடம்பூர் ராஜூ சந்தித்த நிலையில் துரைக்கண்ணுவும் சந்திப்பு.
9:10 AM, 28 Sep

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 293 பேருக்கு அழைப்பு விடுப்பு. அதிமுக செயற்குழு எப்போதும் முதல் தளத்தில் மட்டுமே இயங்கும். இந்த முறை அதிமுக செயற்குழு தரைதளத்திலும் இயங்குகிறது.
READ MORE

ADMK Live: Admk executive meeting convenes today
English summary
ADMK Live: Admk executive meeting convenes today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X