சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுத்தம்.. இன்னொரு சீட்டும் குறைஞ்சு போச்சு.. 3 சீட்தான் தருவோம்.. தேமுதிகவுக்கு ஆப்படிக்கும் அதிமுக!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வெறும் 3 சீட்டுகள் ஒதுக்க வாய்ப்பு என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னது..? தேமுதிக மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்துகிறதா?.. புதிய கூட்டணி உருவாகுமா?- வீடியோ

    சென்னை: எத்தனை முறை தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் சரி, எத்தனை மணி நேரம் பேசினாலும் சரி.. வெறும் 3 சீட் தான் தர முடியும் என்று அதிமுக ஒரு முடிவாக இருக்கிறதாம்.

    4 சீட்டுகள்தான் தரப்படும் என்பது தேமுதிகவுக்கு நேற்று காலையிலேயே உறுதியாக தெரிந்துவிட்டது. அதனால்தான் திமுக பக்கம் பேச்சை ஆரம்பித்தது.

    கடைசியில் தேமுதிக வண்டவாளத்தை துரைமுருகன் விலாவாரியாக புட்டு புட்டு வைக்கவும் ரொம்பவே ஆடிப்போனது பிரேமலதாவும், சுதீஷூம்தானாம். பேச்சுவார்த்தையின்போது என்னென்ன பேசினோம் என்பதையெல்லாம் ஒரு வரி விடாமல் எல்லாத்தையும் துரைமுருகன் இப்படி போட்டு உடைப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

    திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்! திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    அதனால் கொஞ்சம் நஞ்சம் இருந்த எல்லா மானத்தையும் துரைமுருகன் வாங்கிவிடவும் திமுக பக்கம் வாய்ப்பில்லை என்று தெரிந்துவிட்டது. பிறகுதான் மோடி சென்றவுடன் திரும்பவும் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    நள்ளிரவு தாண்டியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? அதிமுக நேற்று மதியத்திற்கு பிறகு ரொம்ப கறாராகிவிட்டது என்று அர்த்தம். அதனால்தான் தேமுதிகவுக்கு 4 என்பதுபோய் இப்போது வெறும் 3தான் தர முடியும் என்கிறதாம். அந்த 3 சீட்டும் எந்த தொகுதிகள் என்று தெரியவில்லை.

    இனி எடுபடாது

    இனி எடுபடாது

    அதனால் இத்தனை நாள் தேமுதிக காட்டிய கெத்து இனிமேல் அதிமுகவிடம் எடுபடாது என்றே தெரிகிறது. அத்துடன் கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலைமையில்தான் தேமுதிக இன்று உள்ளது. இதற்கு காரணம் தேமுதிகவேதான்!

    வாசன்

    வாசன்

    இதனிடையே எவ்வளவுக்கெவ்வளவு தேமுதிக அதிமுகவுக்கு வராமல் போகிறதோ அவ்வளவும் ஒருத்தருக்கு லாபம் என்றால் அது வாசனுக்குதான். இன்னும் அவர் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காமல் இருக்கிறார். ஒருவேளை தேமுதிக "இருக்கு, இல்லை" என்று இரண்டில் ஒன்று தெரிந்தவுடன் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறார் போலும்.

    2 சீட் கன்பர்ம்?

    2 சீட் கன்பர்ம்?

    அப்படி தேமுதிக இல்லாவிட்டால் தமாகா கண்டிப்பாக 2 சீட் அடித்து கேட்கும் என்றே தெரிகிறது. இதுவரை ஒன்றுதான் தமாகாவுக்கு தருவதாக இருந்தது. ஆனால் தேமுதிக மீதுள்ள பிடிப்பு தளர்ந்து வெறுப்பு கூடுவதால் அது வாசனுக்கு சாதகமாக முடியும்போல இருக்கிறது. எப்படியோ வந்தவரை லாபம் வாசனுக்குதான்... இழப்பு தேமுதிகவுக்குதான்!!

    English summary
    ADMK has decided to allocate 3 seats to the DMDK. But it is said that Vijayakanth is unlikely to accept.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X