சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கல்லாவில் 25 தொகுதிகள்.. தேமுதிக உறுதியாகாததால் கடைசி நேரத்தில் மாற்றம்!

21 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் கட்சி கூட்டணியில் இன்றும் சேராததால் அதற்கு ஒதுக்குவதாக இருந்த 4 தொகுதிகளும் அதிமுகவிடமே உள்ளதால் அக்கட்சி வசம் தற்போது 25 சீட்டுகள் உள்ளன.

இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் நாள் அறிவித்துவிடுவார்கள். அதனால் கூட்டணி கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விரைவில் முடிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதான கட்சிகளுக்கு ஏற்பட்டது.

ADMK may contest in 21 Constitutions

இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு 5 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைதவிர புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.

 என்னங்க இது வெறும் 20 வச்சுட்டு என்ன பண்றது.. புலம்பும் அதிமுக புள்ளிகள்! என்னங்க இது வெறும் 20 வச்சுட்டு என்ன பண்றது.. புலம்பும் அதிமுக புள்ளிகள்!

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் என சொல்லப்பட்டது. இதனால் அதிமுக கடைசியில் 21 இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தேமுதிக ஜகா வாங்கி விட்டதால் 4 இடம் மிச்சமாகி அதிமுக வசம் மீண்டும் 25 இடங்கள் வந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் இதுவரை பங்கீடு விவரம்:

அதிமுக = 25
பாமக = 7
பாஜக = 5
புதிய தமிழகம் = 1
புதிய நீதி கட்சி =1
என் ஆர் காங்கிரஸ் =1

என்றால் மீதமுள்ளது 21 தொகுதிகள்தான் உள்ளது. இதில் தமாகாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படவுள்ளது. அதையும் இரட்டை இலையில்தான் தமாகா போட்டியிடவுள்ளது என்பதால் 21 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடவுள்ளது.

English summary
Ruling Party AIADMK going to contest only in 21 Constitution in MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X