"ஓ மை காட்".. பூத்துக்குள் நின்று அமைச்சர் செய்த காரியம்.. அப்படியே கிறுகிறுத்து போனது தமிழகமே!
சென்னை: பிரச்சாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின அமைச்சர் செல்லூர் ராஜூ, ஓட்டுப்போடும் நேரத்திலும்கூட வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.. இதுதான் தற்போது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிட்டுள்ளார்.. இதற்காக பல்வேறு பகுதிகளில் இவர் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
பிரச்சாரங்களின்போது, ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்தித்தபோதெல்லாம், பல கேள்விகளுக்கு துணிச்சலான பதில்களை சொல்லி வந்த செல்லூர் ராஜு, சசிகலா பேச்சை எடுத்ததுமே கப்சிப் என்று ஆகிவிட்டார்..
"இன்னும் ஒரே ஒரு மாசம் பொறுக்க மாட்டீங்களா.. அதுக்குள்ள ஏன் இவ்ளோ அவசரம்".. துரைமுருகன் காட்டம்!

சசிகலா
சில சமயம் டென்ஷன் ஆகிவிட்டார்.. சில சமயம் பதில் சொல்லாமல் கோபப்பட்டார். இது வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் வெளிவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.. மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூத்திற்கு ஓட்டுப்போட செல்லூர் ராஜு வந்தார்.

வாக்காளர்கள்
பொதுவாக வாக்களிக்க வருவோருக்கு அங்கிருக்கும் தேர்தல் அலுவலர்கள் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அட்வைஸ் செய்வார்கள்.. அதற்கு பிறகு ஒரு பாலிதீன் கையுறைகளை தருவார்கள்.. அந்த கிளவுஸை வலது கையில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்.. வலது கையில் அணிந்து கொண்டு, இடது கையில் மை வைப்பார்கள்.. அப்படியே வாக்கு இயந்திரம் அருகே வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

கிளவுஸ்
இப்படித்தான் எல்லாரும் அன்றைய தினம் செய்தார்கள்.. ஆனால், தமிழ்நாட்டிலேயே செல்லூர் ராஜு மட்டும் வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.. அவர்கள் கொடுத்த கிளவுஸை இடதுகையிலேயே மாட்டிக் கொண்டார்.. இடது கையிலேயே மை எடுத்து ஓட்டும் போட்டுள்ளார்.. ஓட்டுப்போட்டு, அதே கிளவுஸ் அணிந்த கையை, பூத்துக்குள் இருந்து மேலே உயர்த்தி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இடது கை விரல்
செல்லூர் ராஜு போஸ் கொடுத்தபிறகுதான், வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் அவரை கவனித்துள்ளனர்.. இதை பார்த்ததும், அமைச்சர் இடது கை விரலால் வாக்கு இயந்திரத்தின் பட்டனை அழுத்தினாரா? அல்லது வலது கை விரலை பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்தது... அதுமட்டுமல்ல, அவர் கொரோனா நடைமுறையை பின்பற்றினாரா என்ற சந்தேகமும் சேர்ந்து எழுந்துள்ளது.

வைரல்
இந்த சந்தேகம் பரவுவதற்குள் செல்லூர் ராஜு பூத்திற்குள் நின்று கிளவுஸ் கையை தூக்கி காட்டிய போட்டோ வைரலாகிவிட்டது.. "விஞ்ஞானி விஞ்ஞானி தான்ய்யா... எப்பவுமே வித்தியாசமாதான் யோசிப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை" என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.