சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"180+" வர போகுதாமே... தாவ தயாராகும் "புள்ளிகள்".. மொத்தம் 18 பேராமே.. காத்திருக்கும் திமுக!

முக ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தரப்பில் இருந்து தூது மெசேஜ் வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: எப்படியும் இந்த முறை திமுகவே ஆட்சியை பிடிக்க போகிறது என்ற அனுமானம் ஆழமாக பரவி வருகிறது.. இந்நிலையில், அதிமுக வட்டாரத்தில் என்ன நடக்கிறது? என்பது குறித்த ஓரிரு தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த முறை ரிசல்ட் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்ற ஆவலில் தமிழகமே உள்ளது.. இதில் திமுக தரப்பை எடுத்து கொண்டால், ஏக சந்தோஷத்தில் உள்ளது..

அதிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு உற்சாகத்தில் கூடி உள்ளது... 10 வருஷங்களாக, விட்டதை பிடிக்கும் முனைப்பில் திமுக திக்குமுக்காடி போயுள்ளது.. 10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுகவோ அதிர்ச்சி ஆகி உள்ளது.

 ரிப்போர்ட்கள்

ரிப்போர்ட்கள்

இதற்கு காரணம் இரு கட்சிகளுக்குமே இதுவரை கிடைத்து வரும் களரிப்போர்ட்கள்தான்.. கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவு வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், எந்தக் கட்சிக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்கிற கணிப்புகளும் சத்தமில்லாமல் நடந்துவந்தன என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

 180 +

180 +

அந்த வகையில்தான், திமுகவுக்கு 180+ என்று சொல்லப்பட்டு வருகிறது.. அதேநேரத்தில் அ.தி.மு.க தரப்பில் அதாவது தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் வரை அதிமுகவுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது.. தேர்தல் முடிவுக்குப் பிறகு பல மூத்த அமைச்சர்களே தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நிகழ்வுகளும் உண்டு..

 இழுபறிகள்

இழுபறிகள்

அதிலும், அந்த கூட்டணியில் போட்டியிடும் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றும், அதிமுக 50 இடங்கள் மட்டுமே உறுதியாக வெல்லும், 20 இடங்கள் இழுபறி என்ற ரீதியில் அதிமுக தலைமையிடம் ரிப்போரிட்டுகள் தரப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதனால் அதிமுக கூடாரமே சற்று கலங்கி போயுள்ளது.. அதிலும் சில முக்கிய புள்ளிகள் திமுக பக்கம் தாவ தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது..

வழக்குகள்

வழக்குகள்

எப்படியும் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து பலமாக ஊடுருவி வருவதால், சில அதிமுக அமைச்சர்கள், புள்ளிகள், விஐபிக்கள் தங்கள் நிலைப்பாட்டை ஓரளவு மாற்றி கொள்ள முன்வந்து கொண்டிருக்கிறார்களாம்.. இதிலும் 2 வகையான அணுகுமுறைகள் உள்ளதாகவும் தெரிகிறது.. ஒன்று, அதிமுக அமைச்சர்கள் சிலர் தங்கள் மீதுள்ள வழக்குகளை, திமுக தூசு தட்டி எடுத்து விடக்கூடாது என்பதற்காக சமாதான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்களாம்..

 சாமி அமைச்சர்

சாமி அமைச்சர்

அதேபோல, மேலும் சில புள்ளிகள் திமுக பக்கம் தாவவும் தூது விடும் முயற்சியில் இறங்கி உள்ளார்களாம்.. இதில் குறிப்பிடத்தக்கவர்கள், முன்னாள் "சாமி" அமைச்சர், எதையாவது உளறி உளறி கொட்டி மாட்டி கொள்ளும் தற்போதைய அமைச்சர், "பண்பாட்டு" துறை சம்பந்தப்பட்டவர், அதிமுக மதுரை சிட்டிங் எம்எல்ஏ, என லிஸ்ட் இப்படி நீளுகிறதாம்.. கிட்டத்தட்ட 18 பேர் வரை திமுக பக்கம் துண்டு விரிக்க முயல்வதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன..

 லிஸ்ட்

லிஸ்ட்

அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியல் திமுகவில் ஏற்கனவே ரெடியாகி வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக தரப்பின் இந்த செய்திகள் சோஷியல் மீடியாவை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. எதுவானாலும் ரிசல்ட் வந்தபிறகு தெரிந்துவிடும்.. பார்ப்போம்..!

English summary
ADMK Ministers, executives message to DMK MK Stalin, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X