சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் பதவி வேண்டாம்... அருண் ஜேட்லி அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நரேந்திர மோடி நாளை பிரதமராக குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

அமைச்சரவையில் யாருக்கு இடம் கொடுக்கலாம், யார் யாருக்கு என்னென்ன இலாகா வழங்கலாம் என பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜேட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாகவும் ஜேட்லி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சிக்கும் ஆட்சிக்கும் வெளியில் இருந்தபடியே அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் அருண் ஜேட்லி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Newest First Oldest First
4:55 PM, 29 May

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஷீலா தீட்சித் தர்னா

சென்னையிலும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பேரணி

11:39 AM, 29 May

நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார். லோக்சபா உறுப்பினராக தேர்வானதை தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
11:18 AM, 29 May

ஒடிசா

ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருடன் அம்மாநில அமைச்சர்களும் பதவியேற்பு. ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
9:50 AM, 29 May

அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்றனர். பதவி பிரமாணம் செய்துவைத்தார் சபாநாயகர் தனபால். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
8:11 AM, 29 May

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? - தி நாராயணன். பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி.
7:30 AM, 29 May

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்பு. தலைமைச்செயலகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

ADMK MLAs taking oath today

English summary
ADMK MLAs takes oath today in Assembly. Chief Minister Edappadi Palanisami and Deputy CM O Paneerselvam are participating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X