சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஈபிஎஸ் கட்சி அல்ல.. அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனர்.. ஜேசிடி பிரபாகர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி அல்ல. இது தொண்டர்களின் கட்சி. நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் உள்ளனர்'' என ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் பதவியை பெற ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.

2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி 2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி

இதற்கு கட்சியின் ஒருங்கிணையப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, கட்சியில் இரட்டை தலைமை தான் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்

ஓ பன்னீர்செல்வத்துக்கு அவமானம்

ஓ பன்னீர்செல்வத்துக்கு அவமானம்

இந்நிலையில் தான் சென்னையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் திட்டம் இருந்தது. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றமும் பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு மத்தியில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

பாதியில் வெளியேறிய ஓ பன்னீர்செல்வம்

பாதியில் வெளியேறிய ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இதற்கு ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக சிவி சண்முகம் அறிவித்ததோடு, பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ல் நடக்கும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர். அப்போது ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டது.

ஜேசிடி பிரபாகர் குற்றச்சாட்டு

ஜேசிடி பிரபாகர் குற்றச்சாட்டு

இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகரன் இன்று கூறியதாவது: ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். செயல்திட்டத்தில் இல்லாததை பேச அனுமதித்ததே தவறு. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றை தலைமை விவகாரம் விவாதமாக்கப்பட்டது.

 திட்டமிட்டு அவமதிப்பு

திட்டமிட்டு அவமதிப்பு

பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ பன்னீர்செல்வத்தை அவமதித்து உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் பேசியபோது பாதியில் மைக்கை ஆப் செய்தனர். தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஒற்றை தலைமை என ஏற்கனவே கூறியதை தான் பொதுக்குழுவில் ஒப்பித்தனர். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும்.

 ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள்

ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள்

அதிமுக என்பது ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமா கட்சியோ, சொத்தோ அல்ல. இது தொண்டர்களின் கட்சி. கட்சி நிர்வாகிகள் பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் உள்ளனர்.
அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம். அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன்'' என்றார்.

English summary
‛‛ AIADMK is not the party of Edappadi Palanichamy. This is the party of volunteers. The party volunteers are on the side of O Panneer Selvam, ”says JCD Prabhakar, a supporter of O Panneer Selvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X