சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல!

விருந்தின்போது தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    எந்த தொகுதி வேணும்?.. தைலாபுரத்தில் நடந்த கலகல!- வீடியோ

    சென்னை: ஆட்டுக்கறி, கோழிக்கறி விருந்துடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அதிமுக-பாமக தரப்பில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதிமுக-பாமக கூட்டணி அமைந்துள்ளது அரசியல் வட்டாரத்திலேயே மிக மிக முக்கியமான நகர்வாகவும் மற்ற கட்சியினர் மூக்கின்மேல் விரலை வைக்கும்படியும் அமைந்துள்ளது.

    ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் 7+1 என்ற சந்தோஷத்தில் இருக்கும் டாக்டர் ராமதாஸ் விருந்து வரை நடத்தி முடித்து விட்டார்.

    செலவுகள்?

    செலவுகள்?

    இதுவெறும் மட்டன், சிக்கன் விருந்து மட்டும் கிடையாது. தேர்தலை சந்திப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தையும் இந்த விருந்தின்போது நடந்ததுதான் ஸ்பெஷல். கூட்டணி என்றால் சும்மாவா என்ன? இத்தனை சீட் என்று ஒதுக்கி, தொகுதி பங்கீட்டை பிரித்து கொடுப்பது மட்டும் கிடையாது. எவ்வளவு செலவுகள் இருக்கும்.. இதெல்லாம் வெட்ட வெளிச்சமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன?

    தேர்தல் செலவு

    தேர்தல் செலவு

    பொதுவாக கூட்டணி கட்சிகளுக்கு ஆகும் பிரச்சார செலவு முதல் தேர்தல் முடிவு வரை ஆகும் எல்லா செலவுகளையும் அந்த கட்சிதான் ஏற்கும். இதுதான் ஆண்டாண்டு காலமாக திரைமறைவில் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் வியாபாரமாக பேசிவிட முடியாது. இப்படி தடபுடல் விருந்தில்தான் நாசூக்காக வெளிப்படுத்த முடியும்.

    காதில் புகை

    காதில் புகை

    இப்போதைக்கு அதிமுகவுக்கு பாமக என்பது பலமான கூட்டணி. அதைவிட்டால் வேறு வலிமையான கட்சியும் உடன் இல்லை. இதனால்தான் மற்ற கட்சிகளுக்கே காதில் புகை வந்து கிடக்கிறது. அப்படி இருக்கும்போது தொகுதி பங்கீடு என்பது ரொம்பவும் அவசியம். அதிலும் அந்த தொகுதிகளில் ஆகும் தேர்தல் செலவு என்பது அதைவிட முக்கியம்.

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    இதைதான் நேத்து ராத்திரி விருந்தில் இரு தரப்பிலும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே இந்த ஆலோசனையை அதிமுக தரப்பில் தீவிரமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. எப்படியும் அதிமுக இதற்கு நோ சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை. அதனால் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலே பாமகவுக்கு கிடைத்திருக்கும்.

    விருந்து-மொய்

    விருந்து-மொய்

    இதை இன்னும் ஈசியா சொல்லப்போனால், கல்யாணத்தில் விருந்து வைத்துவிட்டு, மொய் வைத்துவிட்டு திரும்பி வருவோமே... அதுபோலதான்... விருந்து முடிந்தது... மொய்யும் பலமாகவே முடிந்திருக்கும் என தெரிகிறது!!

    English summary
    It is reported that PMK had negotiated with ADMK about seat sharing during the feast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X