சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதம்மா! ஜெ.தீபாவை சட்டை செய்யாத அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால் அதிமுக தரப்பில் இருந்தோ ஜெ.தீபாவுக்கு இதுவரை எந்த ரெஸ்பான்சும் தரவில்லை.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஊடக வெளிச்சத்தில் தலைக்காட்டாமல் இருந்தவர் ஜெ.தீபா. அவர் மறைந்தவுடன் சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததன் மூலம், யார் இவர்? என்கிற வியப்போடு ஜெ.தீபா மீது மக்களின் பார்வை பதிந்தது. மேலும், ஊடகங்களும் பேட்டி அது இது என அவரை ரவுண்டு கட்ட நமக்கு இவ்வளவு பவர் இருக்கிறதா என சிலாகித்த ஜெ.தீபா, கையோடு பேரவை ஒன்றையும் தொடங்கினார்.

admk refuses to add j.jayalalitha niece j.deepa in party

காத்திருப்பு

இவர் இப்படி என்றால், அவர் கணவரும் சளைத்தவரல்ல. எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம் (எம்.ஜெ.தி.மு.க.)என்ற கட்சியை தொடங்கி அசரடித்தார். இப்படி இருந்த இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் கள யதார்தத்தை உணரத்தொடங்கி தாங்கள் நடத்தி வந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய முடிவெடுத்தனர். அதன்படி பேரவையை கலைத்த தீபா, அதிமுகவில் இணைத்துக்கொள்ளுமாறு ஓ.பி.எஸ்.க்கு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்.

குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்புகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு

பகீரத முயற்சி

இது தொடர்பாக மாதவன் பல பகீரத முயற்சிகள் மேற்கொண்டும் அதிமுகவின் கதவுகள் திறக்கப்படவில்லை. இரண்டு தலைமைகளில் ஒரு தலைமை ஜெ.தீபாவை மீண்டும் இணைக்க வேண்டாம் என உறுதியாக உள்ளதாம். அதனால் தான் அதிமுக தரப்பில் இருந்து எந்த ரெஸ்பான்சும் தீபாவுக்கு தரப்படவில்லையாம்.

பல லட்சம் செலவு

வலிய தேடிப்போய் சேர்த்துக் கொள்ளக்கூறியும் இப்படி செய்தால் என்ன செய்வது என தீபா ரொம்பவே நொந்துகொண்டாராம். ஆனால் மாதவன் விடுவதாக இல்லையாம், எப்படியாவது அதிமுகவில் இணைந்தே தீருவது என்பதில் உறுதியாக நின்று அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்கிறாராம். இதற்காக அவர் பல லட்சங்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
admk refuses to add j.jayalalitha niece j.deepa in party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X