சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    2 தொகுதிகளிலும் நாங்கதான் போட்டி..பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்த அதிமுக | By Election

    சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக ஆழம் பார்க்கிறதாம்.

    தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்றுவரை நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போதெல்லாம், பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி சமாளித்து வெற்றிக்கரமாக உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்துக்கொண்டே வருகிறது தமிழக அரசு.

    admk rehearsal for civic poll by two constieuncy byelection

    உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாததால் மக்கள் தங்கள் பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதனால் தெருக்குழாயில் தண்ணீர் வராததற்கு கூட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை முற்றுகையிட்டு மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் வார்டு கவுன்சிலரிடம் பிரச்சனைகள் பற்றி மக்கள் உரிமையுடன் எந்நேரமும் முறையிட்டிருக்க முடியும்.

    இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மூலம் முன்னோட்டம் பார்க்கிறதாம் அதிமுக. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், அடுத்த மாதமே கூட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மிக அதிக வாய்ப்பிருக்கிறதாம்.

    பணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்பணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்

    ஒரு வேளை ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் கணக்கு தவறானால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை அதிமுகவுக்கு உள்ளதாம். பாமக துணை இருப்பதால் விக்ரவாண்டியிலும், நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதால் அதை வீழ்த்துவது பெரிய காரியம் இல்லை, சுலபம் தான் என எண்ணுகிறதாம் அதிமுக தலைமை.

    English summary
    admk rehearsal for civic poll by two constieuncy byelection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X