• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட "சீனியர்".. அதுதான் காரணமா?.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை

Google Oneindia Tamil News

சென்னை: அன்வர் ராஜாவின் சர்ச்சை பேச்சுக்கள் பலவித யூகங்களையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மிக மூத்த அரசியல்வாதியாக இருப்பவர் முன்னாள் எம்பி அன்வர் ராஜா... இவர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதிலிருந்தே அதன் உறுப்பினராக இருந்து வருபவர்..

கட்சியும் ஆட்சியும் பின்னடைவை சந்தித்த நிலையிலும் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு தாவாதவர்.. அதனாலேயே எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் இவருக்கென தனி முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.. தனி செல்வாக்குடன் அன்வர்ராஜும் திகழ்ந்து வந்தார்.

பூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்பூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்

 உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

திடீரென இவருக்கு குறுக்கே வந்தவர்தான் மாஜி அமைச்சர் மணிகண்டன்.. இவர்களுக்குள் எப்போதுமே சொந்த தொகுதியில் பிரச்சனை வெடித்து கொண்டே இருக்கும்.. தலைமையும் எவ்வளவோ எடுத்து சொல்லியும், இவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.. அதேபோல, அதிமுக தலைமையுடன் எதிர்ப்பும் இல்லாத, ஆதரவும் இல்லாத நிலைமையை சமீப காலம்வரை இவர் கடைப்பிடித்து வந்தார். இந்நிலையில், திடீரென சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அன்வர் ராஜா.

 தலைவர்கள்

தலைவர்கள்

"சட்டப்பேரவை தேர்தல் அதிமுக தோல்விக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை தலைவர்கள் அதிகளவில் பயன்படுத்தாதே காரணம்.. தேர்தல் நேரத்தில் மக்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா என்று கவனிப்பார்கள். அப்படி அவர்களின் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர். அதனால்தான் அதிமுக தோல்வியடைந்து விட்டது.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.. ஆனால் தற்போதைய தோல்விக்கு யாரும் தூக்கிட்டு செத்திருக்கிறார்களா? என அன்வர் ராஜா தான் அதிமுகவுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

 கருத்துக்கள்

கருத்துக்கள்

அன்வர் ராஜாவின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.. என்ன இருந்தாலும் சொந்த கட்சியை அன்வர் ராஜா விமர்சிக்க கூடாது.. ஏற்கனவே உட்கட்சி பிரச்சனை தலைதூக்கி இருக்கும் நிலையில், இவர் எதற்காக அதிமுகவின் தோல்வி பற்றி இப்போது பேசுகிறார் என்ற கேள்விகள் எழுகின்றன..

 இழுக்கு

இழுக்கு

அதுமட்டுமல்ல, இப்படி தற்கொலை செய்ய சொல்லி பேசுவது, தொண்டர்களின் உயிரை பணயம் வைப்பதுபோல் ஆகாதா? ஒரு மூத்த தலைவரே இப்படி பேசலாமா? இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்களை செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர்கள்தானே வழக்கமாக பேசுவார்கள்.. கட்சியின் சீனியர், அதுவும் எம்ஜிஆர் காலத்து நபர் இப்படி பேசியிருப்பது, அதிமுகவுக்குதான் இழுக்கு என்கிறது ஒரு தரப்பு.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இன்னொரு தரப்போ, அன்வர் ராஜா யதார்த்தமாக பிராக்டிகலாக பேசுகிறார்.. இன்றும்கூட கிராமங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால்தான் அதிமுக பெயர் எடுபடுகிறது.. ஓட்டும் விழுகிறது.. அப்படி இருக்கும்போது இந்த தலைவர்களின் பெயரை சொல்லாமல் ஓட்டு கேட்டால், மக்கள் என்ன நினைப்பார்கள்? நகப்புறத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், அதிமுக என்றால இப்போதுவரை தெரிவது எம்ஜிஆரும் ஜெயலலிதாதான். இவர்களை தவிர்த்துவிட்டு யாராலும் அதிமுகவை நடத்த முடியாது, அன்வர் ராஜா சரியாகத்தான் சொல்கிறார்" என்கிறார்கள்.

திமுக

திமுக

இப்படி எதிர்ப்பும் ஆதரவும் இரண்டுமே மாறி மாறி வந்தாலும், 3வதாக ஒரு ஆப்ஷன் எழுகிறது.. இவர் எதுக்கு இப்போ அதிமுகவை குறை சொல்கிறார்? அடுத்தடுத்த தேர்தல்கள் நெருங்கும் சூழலில், மாற்றுக்கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வரும் தருணத்தில், அன்வர் ராஜா அதிமுகவுக்கு எதிரலாக பேசியிருப்பது சந்தேகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.. ஒருவேளை கட்சியில் முக்கியத்துவம் இல்லாத நிலையில், அன்வர் ராஜாவும் திமுக பக்கம் தாவ வாய்ப்பிருக்குமோ? அதற்கான நங்கூரத்தைதான் இப்போது பாய்ச்சுகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.. பார்ப்போம்..!

English summary
ADMK Senior Leader Anwar Rajas speech and whats his Political Plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X