சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அப்படி போடு".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் "மாவட்ட பிரிப்பு" அஸ்திரம்!

சேலம் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை சாய்க்கவும்.. அதிமுகவை பலப்படுத்தவும் எடப்பாடியார் ரெடியாகி விட்டாராம்.. அதற்கான அதிரடிகள், வியூகங்கள், திட்டங்கள் போன்றவைகளை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னதான் கொரோனா தடுப்பு தீவிரத்தில் முதல்வர் எடப்பாடி பிஸியாக பிஸியாக இருந்தாலும், இன்னொரு புறம் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்த எல்லா வேலைகளையும் கையில் எடுத்துள்ளார்.. நிறைய வியூகங்களை அமைப்பதிலும் ஈடுபாடு காட்டி வருகிறாராம்.

ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக நேரடியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.. திமுகவை சமாளிப்பதே தினம் தினம் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், புதுமுகங்களான கமல், டிடிவி போன்றோரும் இந்த முறை களமிறங்க போகிறார்கள்.

ரூ.375 முதல் ஸ்டார்ட்.. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சூப்பர் பேக்கேஜ்கள் ரூ.375 முதல் ஸ்டார்ட்.. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சூப்பர் பேக்கேஜ்கள்

 கவர்ச்சி புள்ளிகள்

கவர்ச்சி புள்ளிகள்

தமிழக பாஜக கவர்ச்சி புள்ளிகளை கட்சியில் சேர்த்து கொண்டு, பலத்தை காட்டி வருகிறது.. ராமதாஸ் தனக்கென உள்ள செல்வாக்கை வலுவாக கையில் பிடித்து உட்கார்ந்துள்ளார்.. இன்னொரு பக்கம் ரஜினி இதோ, அதோ என மிரட்டி வருகிறார்.. அதனால் இவர்களை எல்லாம் சமாளிக்கவும், பெருவாரியான வாக்கு விகிதங்களை அள்ளவும் எடப்பாடியார் தீவிரமாகி வருவதாக கூறப்படுகிறது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

இதில் முதல் அதிரடியாக மாவட்டங்களை பிரிக்கலாமா என்ற யோசனை எழுந்துள்ளது.. தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரிப்பது என்று நடந்து வருகிறது.. சில சமயம் 2 ஆக, சில மாவட்டங்கள் 3 ஆகவும் பிரித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அப்படித்தான், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு என்று வரிசையாக உதயமாயின.

சந்தேகம்

சந்தேகம்

எனினும் மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கொரோனா மொத்தமாக தமிழகத்தை கவ்வி கிடக்கும் நிலையில், எதற்காக இந்த மாவட்டங்களை பிரிக்கும் வேலையில் அதிமுக அரசு இறங்குகிறது என்று சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

 ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

இப்படி பிரிக்கப்பட உள்ளதாக கூறப்படும் மாவட்டங்களில் சேலம் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால்தான் இது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.. முதல்வரின் சொந்த ஊர் அது.. சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா சேலத்தில் நடந்தது.. அப்போது, பேசிய பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தன், சேலத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அதற்கான எல்லா தகுதிகளும் எடப்பாடிக்கு இருப்பதாக சொன்னார்.

சங்ககிரி

சங்ககிரி

முதல்வர் அப்போது இதை கேட்டு சிரித்து கொண்டாலும், தற்போது இந்த விவகாரம்தான் மறுபடியும் சலசலக்கப்பட்டு வருகிறது. ஆனால், "சேலம் மாவட்டத்தை 2-ஆக பிரித்தால் ஒன்று சங்ககிரியாக இருக்கும். இதுதான் மையமான பகுதியாக இருக்கும்,.. ஆனால் எடப்பாடி என்பது ஏதோ ஒரு மூலையில் இருக்கிற ஊராகத்தான் இருக்கும்.. அதனால் எடப்பாடியை தலைநகராக கொண்டு மாவட்டம் அமையக்கூடாது "என்றும் எதிர்ப்பு குரல் எழுகிறது. ஒருவேளை அப்படி எடப்பாடி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை எடப்பாடி மாவட்டத்தில் சேர்க்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

 ஆலோசனை

ஆலோசனை

அதேபோல, திருவண்ணாமலையை 2-ஆக பிரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் ரொம்ப நாளாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தையே 2ஆக பிரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்த நிலையில், திண்டிவனத்தையும் பிரிங்க என்று கேட்டு வருகிறார். கட்சி ரீதியாக நிர்வாக பணிகளுக்காக ஒரு சில மாவட்டங்களை பிரிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஐடி விங்

ஐடி விங்

மற்றொரு பக்கம், மேலும் மூத்த அதிமுக உறுப்பினர்கள், செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஐடி விங்கை பலப்படுத்தும் பணியிலும் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்.. ஆக, திமுகவை சாய்க்கவும், அதிமுகவை வலுப்படுத்தவும் எடப்பாடியார் ஆயத்தமாகி விட்டார் என்றே கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

English summary
admk: sources say that, edapadi to be separate district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X