சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொங்கு மண்டலத்திலும் தெறித்து விளையாடும் அதிமுக.. 8 தொகுதிகளில் போட்டி.. திமுக 4 தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?

    சென்னை: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் ஜஸ்ட் 4 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடும் அதே வேளையில் அதிமுக அதிரடியாக 8 தொகுதிகளில் களம் காண்கிறது.

    கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகும். இங்கு சட்டசபைத் தேர்தலாக இருக்கட்டும், லோக்சபா தேர்தலாக இருக்கட்டும் அதிமுகவின் கொடிதான் பறக்கும்.

    கொங்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை. இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலிலும் அதிமுகதான் இங்கு பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    சூடாகும் விழுப்புரம்.. நேருக்கு நேர் மோதும் பாமக- விசிக.. திருமாவின் ராஜதந்திரம் இதுதான்! சூடாகும் விழுப்புரம்.. நேருக்கு நேர் மோதும் பாமக- விசிக.. திருமாவின் ராஜதந்திரம் இதுதான்!

    10 தொகுதிகள்

    10 தொகுதிகள்

    தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி தனி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷணகிரி, பொள்ளாச்சி என மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன.

    8 தொகுதிகளில் அதிமுக

    8 தொகுதிகளில் அதிமுக

    இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி (தனி) ஆகிய எட்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

    கூட்டணிக்கு 2

    கூட்டணிக்கு 2

    மீதமுள்ள 2 தொகுதிகளில் கோவையை பாஜகவுக்கும், தர்மபுரியை பாமகவுக்கும் அது ஒதுக்கியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை சற்றும் விட்டுத் தராமல் 10ல் எட்டு தொகுதிகளில் அது களம் காண்கிறது.

    4தான் திமுக

    4தான் திமுக

    மறுபக்கம் திமுக தனக்கு சாதகமே இல்லாத கொங்கு மண்டலத்தில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. தருமபுரி, சேலம், நீலகிரி (தனி), பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளே அவை.

    இது அழகா

    இது அழகா

    திமுகவும், அதிமுகவுதான் தமிழகத்தை பல காலமாக ஆண்டு வருகின்றன. ஆனால் இந்த இரு கட்சிகளும் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வளராமல், மற்றவர்களின் தோளில் தொங்கிக் கொண்டு இப்படி பாக்கெட் பாக்கெட்டாக ஆங்காங்கே மட்டும் செல்வாக்குடன் இருப்பதை என்னவென்று சொல்வது!

    English summary
    ADMK has asserted its hold on Kongu belt as it has announced that it will contest 8 out of 10 seats there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X