சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தேச பட்டியல்: திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம்-அதிமுக; பழனி, ஒட்டன்சத்திரம்-பாஜக; ஆத்தூர்-தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற, உத்தேச பட்டியல் என்ற தலைப்பில் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, அதிமுக வேட்பாளர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலம் வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுகவும் 2-ல் பாஜக; ஒன்றில் தேமுதிகவும் போட்டியிடுகிறதாம்.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதி விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ADMK to contest in 3 constituencies in Dindigul Dist?

இந்த நிலையில் அதிமுகவின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என ஒரு உத்தேச பட்டியல் ஒன்று அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான தகவல்கள் இவை.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 தொகுதிகள் உள்ளன.

ADMK to contest in 3 constituencies in Dindigul Dist?

இந்த 7 தொகுதிகளில் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறதாம். திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், வேடசந்தூரில் சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி.பரமசிவம், நத்தம் தொகுதியில் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்புள்ளதாம்.

கடந்த தேர்தலில் திமுக வென்ற பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகள் பாஜகவுக்கும்

அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு தோற்ற ஆத்தூர் தொகுதி தேமுதிகவுக்கும் ஒதுக்கப்படுகிறதாம்.

நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக போட்டியிடும் முடிவில் இருக்கிறதாம். வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லையாம்.

இப்படித்தான் உலாவரும் அந்த சோ கால்ட் உத்தேசபட்டியல் சொல்கிறது.

English summary
According to the unconfirm reports, ADMK may contest in 3 Assembly constituencies in Dindigul Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X