• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சான்ஸே இல்லை.. அதிமுக கொடியோடு சசிகலா என்ட்ரி.. நிர்வாகிகள் குஷி.. தினகரன் மகள் திருமணத்தில் அசத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனின் மகள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. இதையடுத்து, இந்த திருமணம் குறித்த செய்திகளும், போட்டோக்களும், சுவாரஸ்ய தகவல்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

  ❤ மகளதிகாரம்! TTV Dhinakaran Daughter Marriage | Jayaharini | Sasikala | Oneindia Tamil

  அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் இன்று திருவண்ணாமலையில் திருமணம் நடந்து முடிந்தது... சசிகலா தலைமையில் இந்த திருமண விழா நடைபெற்றது.

  இந்த திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் சோஷியல் மீடியாவில் அமமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.. மேலும் அதுகுறித்த செய்திகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.

  9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 20% இடம்... காங்கிரஸிலிருந்து எழும் குரல்... கப்சிப் திமுக..! 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 20% இடம்... காங்கிரஸிலிருந்து எழும் குரல்... கப்சிப் திமுக..!

   மண்டபம்

  மண்டபம்

  அந்த வகையில், நேற்று இரவு பெண் அழைப்பு நிகழ்வு நடந்தது.... அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தனியார் தங்கும் விடுதியில் இருந்து வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் கல்யாண மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக பெண் அழைப்பு நடந்தது...

   விளக்குகள்

  விளக்குகள்

  அண்ணா நுழைவுவாயிலில் முதல் வேங்கிக்கால் மண்டபம் வரைக்கும், ரோடு முழுக்க கலர் கலர் விளக்குகள் ஜெகஜோதியாய் மின்னின. பிறகு மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.. அதைதொடர்ந்து இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.. அப்போதுதான் சசிகலா என்ட்ரி ஆனார்... அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார் சசிகலா.. அவருக்கு தொண்டர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.

   உறவினர்கள்

  உறவினர்கள்

  இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியில்தான் கல்யாணம் நடப்பதாக இருந்தது.. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற இருந்ததாலும், சொந்தக்காரர்களையும், கட்சிக்காரர்களையும் அங்கு கட்டுப்படுத்த முடியாது என்பதாலும் கடைசி நேரத்தில் திருமண மண்டபத்திலேயே திருமணம் முடிவானது..

   திருமணம்

  திருமணம்

  அதன்படியே இன்று காலை சரியாக 7.45 மணிக்கு மணமேடைக்கு வந்தார் மணமகன்... அவரைத் தொடர்ந்து சசிகலாவும் இளவரசியும் மேடைக்கு வந்தனர்.. மேடையின் வலது புறம் இவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.. அங்கு வந்து இருவரும் அமர்ந்தனர்... வேலூர் பொற்கோவில் தலைவர் ரமணியம்மா தாலியை ஆசீர்வதித்து எடுத்துக்கொடுக்க சசிகலா முன்னிலையில் 9.25 மணிக்கு திருமணம் நடந்தது.

   நடிகர் பிரபு

  நடிகர் பிரபு

  இந்த திருமணத்துக்காகத்தான் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த 2 நாட்களாகவே திருவண்ணாமலையில் முகாமிட்டு வந்தனர்.. சசிகலா, இளவரசியை தவிர்த்து, குடும்ப உறவினர்களான நடிகர் பிரபு, ராம்குமாரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

   ஓபிஎஸ்

  ஓபிஎஸ்

  இந்த திருமண நிகழ்வு குறித்து கடந்த 3 மாத காலத்துக்கும் மேலாக ஒருவித எதிர்பார்ப்பு அதிமுக, அமமுக வட்டாரத்தில் இருந்து கொண்டே இருந்தது.. காரணம், தினகரன் மகள் திருமணத்தில் அரசியல் திருப்பம் ஏதாவது ஏற்படும் என்றும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்வார்கள், இதனால் சசிகலாவின் ரீஎண்ட்ரி இதன் மூலம் எளிதில் சாத்தியமாகும் என்றும் கூறப்பட்டது..

   அதிமுக

  அதிமுக

  குறிப்பாக எதிர்முகாமில் உள்ள ஓபிஎஸ் உள்ளிட்டோர் வருகை புரிந்தால், அது நிச்சயம் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே இன்றைய தினம் நடக்கவில்லை. அதேசமயம், அதிமுக கொடியையும் சசிகலா இப்போது வரை விடவில்லை.. எங்கு போனாலும் அதிமுக கொடி என்பதில் உறுதியாக இருக்கிறார்.. ஆனால், கட்சியில் தன்னுடைய முயற்சி எதுவும் இதுவரை பலன் தரவில்லை என்றாலும், குடும்பத்தையாவது ஒன்றுசேர்த்து சரிக்கட்டலாம் என்று சசிகலா யோசித்துள்ளாராம்..

   அதிருப்திகள்

  அதிருப்திகள்

  சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், தினகரனுக்குமிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு உள்ளது.. அதேபோல, தினகரனுக்கும், சசிகலாவுக்கும்கூட, லேசான அதிருப்திகள் உள்ளன.. இது எல்லாவற்றையும் இந்த திருமண வைபவத்தில் களைந்துவிடலாம் என்ற முடிவில் சசிகலா இருப்பதாகவும், எனவே, நிச்சயம் திவாகரன், தினகரனிடம் இது தொடர்பாக பேசக்கூடும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.. எப்படி பார்த்தாலும் ஒரு நல்ல மாற்றத்துக்கான துவக்கமாக இந்த திருமண வைபவம் அமைந்து வருகிறது...!

  English summary
  ADMK: TTV Dinakaran daughter marriage and Sasikala entry with Party Flag
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X