சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கட்சியே இருக்காது".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக - அதிமுக இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை எதிலும் இதுவரை சுமூக தீர்வு எட்டப்படவில்லை.. தேமுதிக வைக்கும் கோரிக்கையை, கேட்கும் சீட்களை கொடுக்கும் எண்ணத்தில் அதிமுக இல்லை என்று தகவல்கள் வருகிறது..

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய முடியாமல் திமுக ஒரு பக்கம் கஷ்டப்படும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது.

இதுவரை பாமகவிற்கு மட்டுமே அதிமுக தொகுதிகளை பங்கிட்டு உள்ளது. 23 தொகுதிகளை பாமகவிற்கு அள்ளிக்கொடுத்து அதிமுக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடை சேர்த்து இந்த தகவலும் வந்ததால் பாமக ஏக குஷியில் இருக்கிறது.

"லோக்கல் கைகள்" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா!

முடிவு

முடிவு

அதிமுகவின் இதே கூட்டணியில் இருக்கும் தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் ஏகப்பட்ட போட்டி நிலவி வருகிறது. ஒரே கூட்டணியில் இருந்தாலும் யார் பெரிய கட்சி என்ற நிரூபிக்க இரண்டு கட்சியும் தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் எப்போதும் மற்ற கட்சியை விட அதிக இடங்களை பெற இரண்டும் போட்டி போடும்.

போட்டி

போட்டி

லோக்சபா தேர்தலில் பாமக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறதோ அதே அளவு இடம் வேண்டும், ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தேமுதிக தீவிரமாக முயன்றது. இந்த முறையும் அந்த போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களை பெற்ற நிலையில் தங்களுக்கும் 20+ இடங்கள் வேண்டும் என்று தேமுதிக பிடிவாதமாக இருக்கிறது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தேமுதிகவுக்கு 15க்கு மேல் இடங்களை ஒதுக்கும் முடிவில் அதிமுக இல்லை. தேமுதிகவை மிகவும் கறாரகவே முதல்வர் பழனிசாமி அணுகி வருகிறார். பாமகவிற்கு கொடுத்த அளவிற்கு எல்லாம் கொடுக்க முடியாது, வெற்றி வாய்ப்பை மனதில் வைத்தே இடம் ஒதுக்குவோம் என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். இது தேமுதிகவை டென்சனுக்கு உள்ளாக்கி உள்ளது.

டென்சன்

டென்சன்

நிலைமை இப்படி சிக்கலாக சென்று கொண்டு இருக்க, நேற்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கொடுத்த பேட்டி அதிமுகவை இன்னும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சுதீஷ் தனது பேட்டியில், 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மட்டும் தேமுதிக இல்லாமல் போய் இருந்தால், அதிமுக என்ற ஒரு கட்சியே இப்போது இருந்திருக்காது என்று கூறினார்.

சீண்டியது

சீண்டியது

அதிமுகவை இந்த பேச்சு பர்சனலாக சீண்டி உள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தேமுதிகவிற்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை அதிமுக வைக்க போகிறது என்கிறார்கள். தேமுதிக வாக்கு வங்கிக்கு ஏற்றபடிதான் இடம் கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்.

கறார்

கறார்

கூட்டணி பேச்சுவார்த்தையை அசால்ட்டாக டீல் செய்யலாம் என்ற திட்டத்திற்கு அதிமுக வந்துள்ளது. சசிகலாவும் ஒதுங்கிவிட்டதால் கூட்டணி கட்சிகளை எளிதாக தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கைக்கு அதிமுக சென்றுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல்வர் இபிஎஸ் திட்டமிட்டு முறையாக செயல்படுவதால் இந்த முறை தேமுதிகவிற்கு அதிக இடங்கள் கிடைக்காது என்கிறார்கள்.

English summary
ADMK will talk with DMDK tomorrow also on the alliance for upcoming Tamilnadu state assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X