சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவையில்லாம எதையும் செய்யாதீங்க.. பேசாதீங்க.. அதிமுகவினருக்கு எம்பி ஓபி.ரவீந்திரநாத் வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவினர் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் எம்பியான ஓபி ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் தேனியில் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ரவீந்திரநாத் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி ஆலயத்துக்கு நன்கொடை அளித்ததாக வைக்கப்பட்ட கல்வெட்டில் ஓபி ரவிந்திரநாத்தின் பெயருக்கு முன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்து.

எதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை! எதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை!

சர்ச்சை - கைது

சர்ச்சை - கைது

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்வெட்டில் இருந்த ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டது. இதுகுறித்து ரவீந்திரநாத் அளித்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகி வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியின் ஒரே எம்பி என்பதால் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. இதனைக் கேட்ட விவசாயிகள் பத்திரிக்கை மற்றும் போஸ்டர்களில் ஓபி ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டிருந்தனர்.

சர்ச்சையான போஸ்டர்

சர்ச்சையான போஸ்டர்

அந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அமைச்சர் பதவி வழங்கப்படும் முன்பே மத்திய அமைச்சர் குறிப்பிடப்பட்டதால் இந்த விவகாரமும் சர்ச்சையானது.

தேவையற்ற கருத்துக்களை தவிருங்கள்

தேவையற்ற கருத்துக்களை தவிருங்கள்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபி ரவீந்திரநாத், அதிமுக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. அதிமுக தொண்டர்கள் தேவையற்ற கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.

எனது தலையாய கடமை

எனது தலையாய கடமை

மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நிறை குறைகளை எங்களிடம் கூறவேண்டும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எனது தலையாய கடமை. இவ்வாறு ஓபி ரவீந்திரநாத் கூறினார்.

English summary
OP Ravindranath requesting ADMK workers to do not Share unwanted things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X