சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்து சென்னையில் ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்தும், தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advocates of Chennai Highcourt protest against Sathankulam

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோரை விசாரணை அழைத்து சென்ற போலீசார், இருவரையும் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கை காவல்துறையே விசாரிக்கக் கூடாது என்றும், பிரகாஷ் சிங் வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, குற்றமிழைத்த போலீசாரை, தனி அமைப்பை உருவாக்கி விசாரிக்க வேண்டும், பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வேண்டும், தவறான மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தி கோஷமிட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advocates of Chennai Highcourt protest against Sathankulam

ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் பாரதி மற்றும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் பிரதமர் சிறுத்தை கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Advocates of Chennai Highcourt protest against Sathankulam

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- ஹைகோர்ட்; ஜூலை 15-க்குள் வழிகாட்டு நெறிமுறை- மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- ஹைகோர்ட்; ஜூலை 15-க்குள் வழிகாட்டு நெறிமுறை- மத்திய அரசு

Advocates of Chennai Highcourt protest against Sathankulam
English summary
Advocates of Chennai Highcourt protest against Sathankulam Father Son murder case and demand to set up an organisation for enquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X