சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது கொடுமை.. தமிழகத்தில் ஆப்பிரிக்க மாவுப்பூச்சி தாக்குதல்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்திய மாவுப்பூச்சி தாக்குதல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு நிதி உதவியை அவர் அறிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் ஆப்பிரிக்க மாவுப்பூச்சி தாக்குதல்.. முதல்வர் அறிக்கை

    வட இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் கடுமையாக இருப்பதால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்குதல் அபாயம் இருப்பதாக கர்நாடகாவிற்கும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே, அவை தென்னிந்தியாவிற்கு வந்து விடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

    ஆப்பிரிக்க நாடுகள்

    ஆப்பிரிக்க நாடுகள்

    ஆப்பிரிக்க நாடுகளில் விவசாய பயிர்களை நாசம் செய்யக் கூடிய மாவுப்பூச்சி தாக்குதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்: நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டுள்ளேன்.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    தமிழ் நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளியில் புதிய இன மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆய்வு பணிகள்

    ஆய்வு பணிகள்

    ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த வகை மாவுப்பூச்சிகள், நடவு குச்சிகள் வாயிலாக பரவிவருகிறது. தற்போது நிலவிவரும் அதிக வெப்ப நிலையின் காரணமாக மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இந்த தாக்குதல் விபரம் தெரிந்த உடனேயே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மாவுப் பூச்சியின் தாக்குதலைக் குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில் தோட்டக்கலை விரிவாக்க பணியாளர்கள் 27ஆம் தேதியன்று மேற்கொண்ட கள ஆய்வுகளின் படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உதவி

    உதவி

    மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் பயிர்ப்பாதுகாப்பு பணிக்காக ரூ.54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஹெக்டேருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu has new African insects attack in farm lands, says CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X