சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்ற உத்தரவு.. பொங்கல் பரிசு வழங்குவது உடனடி நிறுத்தம்.. வரிசையில் நின்று திரும்பிய மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை- வீடியோ

    சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    After Chennai HC bans to give the Pongal gift, most of the ration shop stops to issue gift

    கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதித்தனர். அதாவது வெள்ளை நிற அட்டை வைத்துள்ள நபர்களுக்கு ரூ 1000 பரிசு தொகை கிடையாது.

    இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள ரேஷன் கடையில் ரூ. 1000 வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

    மதுரையில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தகவல்கள் எழுந்தன.

    English summary
    After Chennai HC bans to give the Pongal gift, most of the civil supply shops stops to issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X