சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுவாசிக்க தகுதியற்ற நிலை.. சென்னையிலும் மாசடைந்த காற்று.. கண்காணிப்பு மையம் எச்சரிக்கை!

சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையிலும் மாசடைந்த காற்று... ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தகவல்

    சென்னை: சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது.

    டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு தற்போது உலகம் முழுக்க முக்கிய செய்தியாக எழுந்துள்ளது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது.

    டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது. மாசுபாடு காரணமாக சாலை போக்குவரத்து டெல்லியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி காற்று மாசு தமிழகத்தை பாதிக்குமா.. வானிலை ஆராய்ச்சியாளர் ரமணன் சொல்வது என்ன? டெல்லி காற்று மாசு தமிழகத்தை பாதிக்குமா.. வானிலை ஆராய்ச்சியாளர் ரமணன் சொல்வது என்ன?

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    இந்த நிலையில் டெல்லியை போலவே சென்னையிலும் காற்று மாசுபட்டு வருகிறது. சென்னையில் காற்றின் தரம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக இருப்பதாகவும், காற்று இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    வாரியம்

    வாரியம்

    மத்திய காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் இறுதிவரை இந்த நிலை நீடிக்கும் என்று கூறுகிறார்கள்.

    அதிகமாக பனி

    அதிகமாக பனி

    அதிகமாகி வரும் பனியால் காற்றின் அடர்த்தி அதிகம் ஆகியுள்ளது. இதனால் தூசுக்கள் பறந்து செல்லாமல் கீழேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது காற்று மாசுக்கு மிக முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள். டெல்லியில் இருந்து சென்னைக்கு புகை வர வாய்ப்புள்ளதாம்.

    என்ன நிலை இருக்கிறது

    என்ன நிலை இருக்கிறது

    ஏற்கனவே சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் சொன்னது போலவே தற்போது சென்னையில் காற்றின் நிலை மோசமாக இருக்கிறது. மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    English summary
    After Delhi, Now Chennai is struggling to breathe due to unexpected heavy pollution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X