சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் குக செல்வம்...அடுத்தது இவரா...திமுகவில் சரியும் டிக்கெட்டுகள்!!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவுகிறார் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. குக செல்வம் என்று கடந்த இரண்டு நாட்களாக செய்தி உலா வந்தது. தமிழக அரசியலே களை கட்டியது. நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். இன்று பாஜகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து தூத்துக்குடி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணையலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

டெல்லிக்கு நேற்று சென்று இருந்த குக செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''திமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை இழுவுபடுத்தியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியுடன் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும்'' என்று பேட்டி அளித்து இருந்தார்.

After Ku ka Selvam speculation about Anitha radhakrishnan may switch over to BJP

இந்த நிலையில், இன்று குக செல்வம் பாஜகவில் இன்று இணைந்தார். சென்னை, தி.நகரில் இருக்கும் பாஜகவின் கமலாலயம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து திமுகவினருக்கும் ஸ்டாலினுக்கும் அறைகூவல் விடுத்தார். ''இந்து மக்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்றால் என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வேன் என்று அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். திராணி இருந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள். திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டேன். இப்போது உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை திமுகவில் உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் திமுகவில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம். அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள்'' என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.

திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கை ஓங்குகிறது என்பதால் மூத்த தலைவர்கள் விரக்தியில் இருக்கின்றனர் என்ற பேச்சு அடிபட்டது. இதற்கு முன்னதாக விபி துரைசாமி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து இருந்தார். முதன் முறையாக தற்போது ஒரு சிட்டிங் திமுக எம்.எல்.ஏவான குக செல்வம் பாஜகவுக்கு தாவி இருக்கிறார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை குக செல்வம் கேட்டதாகவும், ஆனால், அந்தப் பொறுப்பு உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் குக செல்வம் விரக்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

கு.க.செல்வம் ஏன் இப்படிச் சொல்கிறார்.. உதயநிதியால் திமுகவில் மூத்தவர்களுக்கு பிரச்சினையா??கு.க.செல்வம் ஏன் இப்படிச் சொல்கிறார்.. உதயநிதியால் திமுகவில் மூத்தவர்களுக்கு பிரச்சினையா??

இவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதா கிருஷ்ணன் பாஜக பக்கம் செல்லலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. 2001ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதையடுத்து, ஹவுசிங் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் 2011ல் திமுகவில் இணைந்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இடையிலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுக சென்று அங்கிருந்து மீண்டும் திமுக வந்தார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சரத்குமாரை தோற்கடித்தார். இவர் இதுவரைக்கும் திமுக, அதிமுக என்று மாறி மாறி கட்சி தாவியுள்ளார்.

கடந்த ஒரு நாளுக்கு முன்பு கூட அவரது பேஸ்புக்கில் Father Of Modern Tamil Nadu என்று குறிப்பிட்டு கருணாநிதியின் புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு வர இருப்பதாக செய்தி வெளியானது. அதுவும் புஷ் என்றானது. ''வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு'' என்று கூறி சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்தார். இவர் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் களை கட்ட ஆரம்பித்துள்ளன.

Recommended Video

    55 வயசாய்ருச்சா.. திமுகவில் இருக்கீங்களா.. பேசாம பாஜகவுக்கு வந்துருங்க - கு. க. செல்வம்

    English summary
    After Ku ka Selvam speculation about Anitha radhakrishnan may switch over to BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X