சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் மாஸ்டர் மைண்ட்.. மமதாவிற்கு வழி காட்டியவர்.. திமுகவிற்காக களமிறங்கும் பிகே.. மாஸ் திட்டம்

இந்தியாவில் பல அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் மாஸ்டர் மைண்டாக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது திமுகவிற்காக களமிறங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பல அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் மாஸ்டர் மைண்டாக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது திமுகவிற்காக களமிறங்கி உள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை இவர் திமுகவிற்காக வகுக்க உள்ளார் .

அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்வதும், தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதும் மக்களுக்கு தெரியும். ஆனால் இவர்களுக்கு இந்த திட்டங்களை தருவது யார்? மக்களை கவரும் வகையில் கட்சிகள் எப்படி திட்டங்களை வகுக்கிறது என்று பலருக்கும் கேள்வி இருக்கும்.

உலகம் முழுக்க இதற்காக நிறைய அரசியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல்களில் அரசியல் ஆலோசகர்களின் பணிகள் எப்போதும் மிக முக்கியமானது. அதிபர் தேர்தலையே தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் - மோடி நம்பிக்கைஈழத் தமிழர்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் - மோடி நம்பிக்கை

உதாரணம்

உதாரணம்

அந்தவகையில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் பிரசாந்த் கிஷோர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் இந்தியா முழுக்க பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர் தனி டீம் வைத்துள்ளார். பல லட்சம் செலவில் இந்த பணிகளை இவர் கவனித்து வருகிறார்.

எப்படி

எப்படி

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு எப்படி வெற்றிபெறுவது என்று ஆலோசனை வழங்குவது, கூட்டணி திட்டங்களை தருவது, எங்கு வெற்றி வாய்ப்புள்ளது, என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது. வாக்குறுதிகள் என்ன கொடுக்க வேண்டும், மேடையில், செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று பல விஷயங்களை இவர் வழங்குவார்.

என்ன உதாரணம்

என்ன உதாரணம்

உதாரணமாக, பிரபல செய்தியாளர் கரன் தப்பரிடம் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் அளித்த பேட்டி மிகவும் பிரபலமானது. அந்த பேட்டியில் கரன் தாப்பர் கேட்ட சில கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு திணறிப்போனார். முதல்வன் படத்தில் அர்ஜுனை எதிர்கொள்ள முடியாமல், ரகுவரன் திணறுவது போல மோடி அந்த பேட்டியில் திணறிப்போய் தண்ணீர் எடுத்து குடிக்கும் நிலைக்கு சென்றார்.

என்ன ஆனது

என்ன ஆனது

அதன்பின் மோடிக்கு தேர்தல் நேர ஆலோசகராக பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2011 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்காக பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில் மோடி வெற்றிபெற காரணமாக அவர் இருந்தார்.

அதேபோல் 2014 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜகவால் பயன்படுத்தப்பட்டார். அப்போதும் பாஜக நாடு முழுக்க பிரபலம் அடைந்து வெற்றிபெற்றது.

ஆலோசனை வழங்கினார்

ஆலோசனை வழங்கினார்

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பத்திரிக்கையாளர்கள் மீது இருக்கும் பயம் போக வேண்டும் என்பதற்காக மோடியிடம் அந்த கரன் தாப்பர் வீடியோவை 30 முறை போட்டு காட்டினார் பிரசாந்த் கிஷோர். மோடி எங்கே தப்பு செய்கிறார், மேடையில் எப்படி பேச வேண்டும் , கேள்விகள் கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் மோடிக்கு சொல்லிக்கொடுத்தார்.

செம இமேஜ்

செம இமேஜ்

அது மோடிக்கு என்று ஒரு இமேஜ் உருவாக காரணமாக இருந்தது. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கிய கட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறது. அதன்பின் இவர் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய பிரதேச தேர்தலில் உதவினார். அங்கு காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

வேறு என்ன

வேறு என்ன

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வெற்றிகரமான கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவர்தான் ஆலோசனை வழங்கினார். இதனால்தான் கட்சி தொடங்கி 10 வருடத்திலேயே ஜெகன் முதல்வராக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

அதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சிக்கு திட்டம் வகுத்து கொடுத்த அங்கு அம்ரிந்தர் சிங் ஆட்சி அமைக்க வழியை போட்டுக்கொடுத்தார். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இவர் செய்து கொடுத்த திட்டங்கள் பலன் அளிக்கவில்லை. ஆனால் பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க இவர் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார்.

எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

நேற்று மேற்கு வங்க மாநிலத்தின் காரக்பூர் சதார், கரீம்பூர், கலியா கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. இதற்கும் பிரசாந்த் கிஷோர்தான் காரணம். தில் திரிணாமுல் தன்னுடைய வீழ்ச்சியை சந்திக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியானது.ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கி மூன்று தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது

மக்கள் நீதி மையம்

மக்கள் நீதி மையம்

இந்த நிலையில் அவர்தான் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஆலோசகராக இருக்கிறார். கடந்த ஒரு வருடமாக லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை அவர்தான் தயார் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க வேண்டும். பதவிகள் விரிவாக இருக்க வேண்டும். மக்களிடம் இன்னும் அதிகமாக, கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் உரையாட வேண்டும் என்று நிறைய ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளார்.

அட எப்படி

அட எப்படி

அதன் தலைவர் கமல்ஹாசன் தற்போது பிரசாந்த் கிஷோர் சொல்லியபடியே கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர தொடங்கிவிட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கும் இவரின் ஆலோசனையை மக்கள் நீதி மய்யம் கேட்கிறது. லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3% வாக்குகளை பெற இதுதான் காரணம்.

திமுக எப்படி

திமுக எப்படி

இவரின் மாஸ் டிராக் ரெக்கார்டை பார்த்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவிற்காக இவரை அழைத்து இருக்கிறார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு மாஸ்டர் மைண்ட் திமுகவிற்காக வந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூறலாம்.

அட மாஸ்

அட மாஸ்

இதன் மூலம் சட்டசபை தேர்தலில் எங்கெல்லாம் போட்டியிட வேண்டும். இப்போதே கட்சியை எப்படி தயார் செய்ய வேண்டும். ஆளும் கட்சியின் பெரிய கூட்டணியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் உடன் ஆலோசனைகளை செய்ய உள்ளார்.

English summary
After PM Modi and Mamata, Its time for DMK chief M K Stalin to get Prashant Kishor help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X