சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமாவளவன் வைத்த அதிரடி செக்.. திடுக்கிட்டுப் போன திமுக.. இப்ப டீல் ஓகே!

Google Oneindia Tamil News

Recommended Video

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக- வீடியோ

    சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சற்று முறுக்கு காட்ட ஆரம்பித்ததால் டக்கென இறங்கும் முடிவுக்கு வந்ததாம் திமுக. அதேசமயம், தனது நிபந்தனைக்கு விடுதலைச் சிறுத்தைகளை ஒப்புக் கொள்ள வைத்த பிறகே 2 சீட்டையும் அது ஒதுக்க முன் வந்ததாம்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இன்று திமுக கூட்டணியில் 2 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி ஆரம்பத்திலிருந்தே 2 தொகுதிகளைத்தான் கேட்டு வந்தது.

    ஆனால் ஒரு தொகுதி மட்டுமே என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்தது திமுக. இந்த நிலையில்தான் இன்று திடீரென டீல் ஓகே ஆகியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி.. திமுகவின் தாராளம்.. பலே பின்னணி இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி.. திமுகவின் தாராளம்.. பலே பின்னணி இதுதான்

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    திமுக கூட்டணியில் காலம் காலமாக அங்கம் வகித்து வரும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கே ஒரு தொகுதியை தான் தந்துள்ளார் மு.க. ஸ்டாலின். ஆனால் திருமாவுக்கு 2 சீட் ஒதுக்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

    என்ன பின்னணி

    என்ன பின்னணி

    இதற்கான பின்னணி குறித்து விசாரித்ததில், உண்மையை போட்டு உடைத்தனர் விசிக வட்டாரத்தினர். திமுக கூறிய நிபந்தனைகளை திருமா ஏற்றுக்கொண்டது ஒரு காரணமாக இருந்தாலும், திமுகவுக்கு டாடா காட்டிவிட்டு டி.டி.வி.யை வி.சி.க. சிந்திக்கத்தொடங்கியது.

    தலைவர்கள் அதிர்ச்சி

    தலைவர்கள் அதிர்ச்சி

    இதனால் அதிர்ச்சி அடைந்தனர் திமுக மூத்த தலைவர்கள். எங்கே பாமகவை நம்முடைய அலட்சியத்தால் நழுவ விட்டதைப் போல திருமாவையும் கை நழுவ விட்டு விடுவோமோ என்று அவர்களுக்குப் பயம் வந்து விட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களாம் திமுக மூத்த நிர்வாகிகள்.

    ஸ்டாலின் சுதாரிப்பு

    ஸ்டாலின் சுதாரிப்பு

    இதனால் சுதாரித்துக்கொண்ட திமுக, விசிகவிடம் நிபந்தனை ஒன்றை விதித்தது. திருமாவும், ரவிக்குமாரும் போட்டியிடுவதாக இருந்தால் மட்டும் 2 தொகுதியை ஒதுக்குகிறோம் என்று. அதற்கு பாசிட்டிவ் பதில் கிடைத்ததால் 2 தொகுதியை திருமாவுக்கு அளிக்க ஸ்டாலின் ஒப்புக்கொண்டாராம்.

    இங்குதான் போட்டியாம்

    இங்குதான் போட்டியாம்

    இதற்கு அடுத்து தான் அறிவாலயத்தில் வைத்து முறைப்படி அறிவிக்கப்பட்டது. மேலும் சிதம்பரம் திருமாவுக்கும், விழுப்புரம் ரவிக்குமாருக்கும் என கிசுகிசுக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

    English summary
    Sources say that After VCK decided to backtrack DMK came forward to allot two seats the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X