சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கு முடிவே கிடையாதா?.. விஜய், அஜித், சூர்யா.. இப்போது விஜய் சேதுபதியையும் சீண்டும் பாஜக தலைகள்!

தமிழக பாஜக தலைவர்கள் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

காஷ்மீர் பிரிவினை குறித்து நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து பெரிய வைரலாகி உள்ளது. விஜய் சேதுபதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார்.

அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் பழமொழியை வைத்து விஜய் சேதுபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

 யார்

யார்

இவரின் கருத்திற்கு தமிழகத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியது யார் என்று பார்த்தால்.. கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அது யார் என்று. ஆம் அது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ஆம் எப்போதும் பாஜக கட்சி தமிழகத்தின் முன்னணி நடிகர்களுடன் சண்டை போடுவது போல தற்போது விஜய் சேதுபதியுடனும் சண்டை போட்டுள்ளது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த முறை தமிழிசை நேரடியாக விஜய் சேதுபதி பெயரை குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன், காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள், என்று மறைமுகமாக தாக்கி உள்ளார்.

 முன்பு விஜய்

முன்பு விஜய்

ஏற்கனவே பாஜக தமிழகத்தில் விஜயை எதிர்த்து இருக்கிறது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து டயலாக் பேச அது பாஜகவை சீண்டியது. விமர்சனம் செய்ததோடு நிற்காமல் எச். ராஜா ''ஜோசப் விஜய்'' என்று டிவிட் செய்ய அது பெரிய சர்ச்சையானது. ஆனால் பிரச்சனை அதோடு நிற்கவில்லை.

 அஜித் அடி

அஜித் அடி

விஜயை தாக்கி அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்றுதான் பாஜக நினைத்தது. அஜித் ரசிகர்களை பாஜகவில் இணைக்க அக்கட்சி முயன்றது. அதை போலவே சில அஜித் ரசிகர்களும் பாஜகவில் இணைந்தார்கள். ஆனால் அஜித் வேகமாக செயல்பட்டு உடனே அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.தனக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை என்று கூறினார்.

 சூர்யா எப்படி

சூர்யா எப்படி

இந்த அறிக்கை பாஜக தலைவர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அஜித் உடனும் பாஜகவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதெல்லாம் போக நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதால் அவரையும் பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். சூர்யாவை பணக்காரர், ஏழையின் வலி புரியவில்லை என்று பாஜக தலைவர்கள் கிண்டல் செய்தது.

 விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதற்கு அடுத்தபடியாகத்தான் தற்போது விஜய் சேதுபதியையும் பாஜக விமர்சனம் செய்துள்ளது. இப்படி வரிசையாக முக்கிய நடிகர்களை பாஜகவினர் விமர்சனம் செய்தாலும் ரஜினியை இதுவரை பாஜக விமர்சனம் செய்ததே கிடையாது. ரஜினியே புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசி இருந்தாலும் அவரை மறைமுகமாக கூட பாஜக விமர்சிக்கவில்லை.

 இரண்டு பேர்

இரண்டு பேர்

பேட்ட படத்தில் நடித்த இரண்டு நடிகர்களில் இரண்டு பேருமே காஷ்மீர் குறித்து பேசி இருக்கிறார்கள். அதில் ஒரு நடிகரை பாஜக தூக்கி வைத்து கொண்டாடுகிறது. ஆனால் காஷ்மீருக்கு எதிராக பேசிய இன்னொரு நடிகரை, அவருக்கு விவரம் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களை பாஜக பகைத்துக் கொள்வது நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் அந்த கட்சிக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும்.

English summary
After Vijay, Ajith, and Suriya, Now Vijay Sethupathy also targeted by BJP in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X