சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைக் சீட்டில் ஆம்லெட் போடுவது.. ஜன்னல் வழியாக சிக்கன் பிரை செய்வது.. இந்த அலப்பறைகள் நாளையோட ஓவர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Weather Report: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று நல்ல கோடை மழை பெய்யும்- வீடியோ

    சென்னை: கடந்த 4 -ஆம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் நாளையுடன் முடிவடைய போகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 4-
    ஆம் தேதி கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதற்கு முன்னதாக ஃபனி புயல் வேறு தமிழகத்துக்கு வருவதாக இருந்து திசை மாறி ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது.

    இதனால் வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் காலை 10 மணிக்கு முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.

    இலங்கையில் இருந்து எஸ்கேப்: 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல் இலங்கையில் இருந்து எஸ்கேப்: 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்

    வெப்பசலனம்

    வெப்பசலனம்

    கடும் வெயிலால் ஆங்காங்கே இளநீர், ஜூஸ் கடைகள், நுங்கு, தர்ப்பூசணி விற்பனை ஜரூராக நடைபெற்று வந்தது. 100 டிகிரி மேல் வெப்பம் அதிகரித்து வந்தது. எனினும் வெப்பசலனம் காரணம் சில இடங்களில் மழை பெய்தது.

    திருத்தணியில்

    திருத்தணியில்

    கடும் வெயிலால் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியது. இதனால் மக்கள் காலிகுடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி திருத்தணியில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி எடுத்தது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    அத்துடன் தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில் நாளையுடன் அக்னி நட்சத்திரம் விடை பெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஓரளவு

    ஓரளவு

    இனி வெயிலில் நிற்கும் வாகன சீட்டுகளில் ஆம்லெட் போடுவது , ஜன்னல் வழியே சிக்கனை காண்பித்து பிரை செய்வது போன்ற அலப்பறைகள் நாளையுடன் முடிவடையும். அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் வெயிலின் தாக்கம் ஓரளவுக்குத்தான் குறையும் என கூறப்படுகிறது.

    English summary
    Agni Natchathiram comes to an end by tomorrow. People are very happy on hearing this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X