சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை.. அ.ம.மு.க அசத்தல் தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டது.

Agriculture, Small Business and Education Loans waiver: AMMK Election Manifesto

டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக் டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்

தேர்தல் களத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அமமுக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.

* விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* 7 பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை வலியுறுத்தப்படும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.

* முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்

* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்

* பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய மாநில அரசு வேலைகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை

* கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

* தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்

* மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி , மதுரைக்கு விரிவாக்கம், சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை

* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்

* ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும்.

* இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

* வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம்.

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

* இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

* விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

English summary
AMMK Election Manifesto Release
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X