சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கண் அறுவை சிகிச்சை செய்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமத் அதிப்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலில் பதுங்கி இருந்த நிலையில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் 2 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் சிகிச்சை பெற வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாலத்தீவில் 2015-ம் ஆண்டு சில மாதங்கள் மட்டுமே துணை அதிபராக இருந்தார் அகமத் அதிப். அவர் மீது ஊழல் மோசடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Ahmed Adeeb got treatment from Pune Hospital

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜூன் மாதம் புனேயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை சிகிச்சை செய்ய அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு அகமத் அதிப் வந்திருந்ததார்.

இதையடுத்து நாடு திரும்பிய அகமத் அதிப் திடீரென தலைமறைவானார். இந்த நிலையில்தான் இன்று தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் இந்தியாவுக்கு தப்பி வர முயன்று சிக்கியுள்ளார் அகமது அதிப்.

மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி! மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி!

தற்போதைய நிலையில் அவர் இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளாரா? இல்லையா என்பது தெரியவில்லை. அதேபோல் மாலத்தீவுக்கு நடு கடத்தப்படுவாரா? என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

English summary
Madlvies Ex Vice President Ahmed Adeep was treated in a hospital in Pune for an eye problem few months ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X