சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விடாமல் துரத்தும் திமுக".. 11 எம்எல்ஏக்களிடம்.. வீடியோ கான்பரன்ஸ் மூலம்.. சபாநாயகர் நாளை விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: அந்த 11 பேரை திமுக விடுவதாக இல்லை.. முக்கியமாக ஓபிஎஸ்ஸை ரவுண்டு கட்டி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் வரை சென்று 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சூடுகிளப்பி பரபரப்பாக்கியதே திமுகதான்.. அந்த வகையில், 11 எம்எல்ஏக்களிடம் கோர்ட் உத்தரவிட்டபடி, சபாநாயகர் தனபால் நாளை விசாரணை நடத்த உள்ளார்... வீடியோ கான்பரன்ஸ் மூலம் 11 பேரிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளாராம்.. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது!

2017-ல் ஆரம்பித்த கேஸ் இது.. இன்னும் நடந்து வருகிறது.. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இவர்களை தகுதிநீக்கம் செய்ய கோரி அளிக்கப்பட்ட புகாரின் மீது சபாநாயகர் தனபாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தை திமுக கையில் எடுத்தது.. சென்னை ஹைகோர்டில் கேஸ் போட்டது.

ஒன்னு வழிக்கு கொண்டு வரணும்.. இல்லாவிட்டால் டேமேஜ் செய்யணும்.. என்ன பிளான்.. திமுகவை கதறவிடும் பாஜக?ஒன்னு வழிக்கு கொண்டு வரணும்.. இல்லாவிட்டால் டேமேஜ் செய்யணும்.. என்ன பிளான்.. திமுகவை கதறவிடும் பாஜக?

 சாதக தீர்ப்பு

சாதக தீர்ப்பு

இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது- உடனே திமுக சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது.. புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பும் வழங்கி இந்த கேஸை கோர்ட் முடித்து வைத்தது. பிறகு, ஓபிஎஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.. அதோடு சரி, அது என்னவானது என்று தெரியவில்லை.

தீர்ப்பு

தீர்ப்பு

அதனால் பொறுத்து பொறுத்து பார்த்த திமுக, இந்த விவகாரத்தை மறுபடியும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு போனது.. தீர்ப்பு சொல்லி 3 மாசமாகியும் சபாநாயகர் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் மனுவில் தெரிவித்தது.

விளக்கம்

விளக்கம்

இதனிடையே, இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை. அதனால், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று முதல்வர் கூறியிருந்தார்.

 4 வார காலம்

4 வார காலம்

எனினும் கோர்ட் 4 வாரங்களுக்குள் 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்கவும் , தமிழக சட்டசபை செயலாளர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது தொடர்பாக சபாநாயகர் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளார்... வீடியோ கான்பரன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களிடம் நாளை விசாரணை மேற்கொள்கிறார் சபாநாயகர் தனபால்.

 வீடியோ கான்பரன்ஸ்

வீடியோ கான்பரன்ஸ்

அப்போது, திமுக தரப்பு, சபாநாயகர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... அதுமட்டுமல்ல, 11 பேர் நிலை என்ன? முதல்வர் தந்த விளக்கம் எடுபடுமா? முக்கியமாக ஓபிஎஸ்-க்கு எதிராக இந்த விசாரணையின் முடிவு அமையுமா என்றெல்லாம் இனிதான் தெரியவரும்..எப்படி பார்த்தாலும் இந்த விஷயத்தை திமுக லேசில் விடாது என்று மட்டும் தெரிகிறது!

English summary
11 mlas Disqualified case: speacker Dhanapal enquiry 11 mlas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X