பொது சிவில் சட்டத்திற்கு அதிமுகவும் எதிர்ப்பு.. பாஜக அரசுக்கு எதிராக துணிந்து முடிவெடுத்த எடப்பாடி!
சென்னை: மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிராகவே உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து அதிகம் பேசத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வாக்கு அரசியல் செய்யும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் விமர்சித்தார். பொது சிவில் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை ஆளும் திமுக, பாஜக அரசு கொண்டு வரத் துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறது. பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என மத்திய நிலைக்குழுவிற்கு மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான வில்சன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பொது சிவில் சட்டத்தை விமர்சித்து, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொது சிவில் சட்டம் குறித்து அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க அதிமுகவினர் தயங்கினாலும், இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கருத்தில் கொண்டு அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பேசியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிராகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துள்ளோம். எந்த வடிவத்திலும் அதனை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்துவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை எந்த வடிவில் அமல்படுத்த முயற்சித்தாலும் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம். பாஜக உடனான உறவு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம்" என்று தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications