சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்

அதிமுகவும், அமமுகவும் விரைவில் இணையும் என சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    AIADMK- AMMK joins | அதிமுகவில் பெரிய மாற்றம்!.. பரபரக்கும் அரசியல் களம்- வீடியோ

    சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு, இவங்க ரெண்டு பேரும் எப்ப சேர போறாங்க என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. வேறு யாரு.. அதிமுக, அமமுக தரப்புகள்தான்!

    திமுக வலுவான நிலையில் தமிழகத்தில் உள்ளதை இந்த லோக்சபா தேர்தல் நிரூபித்து விட்டது. என்னதான் 9 சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாலும் கூட அதன் தடுமாற்ற நிலையை மக்கள் உள்பட அனைவருமே இந்த தேர்தலில் பார்த்து விட்டனர்.

    இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைககள் விரைவில் முடுக்கி விடப்படவுள்ளனவாம். நீங்கள் ஒன்றாக வேண்டும். வேறு வழியே இல்லை என்று பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு தெளிவாக சொல்லப்பட்டு விட்டதாம். இதனால் அதிமுக தலைமை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.

    அவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்! அவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்!

    மனநிலை

    மனநிலை

    பாஜக சொன்னால்தான் என்றில்லை, அதிமுகவினரே கூட இப்போது நாம் பிரிந்து போனதுதான் பெரும் பாதகமாகி விட்டது. மறுபடியும் இணைந்தால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற மன நிலைக்கு வந்துள்ளனராம்.

    தோல்வி காரணம்

    தோல்வி காரணம்

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வெற்றியை திமுக பறித்தது என்று சொன்னாலும் கூட பல தொகுதிகளில் அமமுககவும் கூட அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 3வது கட்சியாக அமமுக உருவெடுத்துள்ளது. அக்கட்சி மட்டும் அதிமுகவுடன் இணைந்திருந்தால், நிச்சயம் திமுகவுக்கு டஃப் கொடுத்திருக்கும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம்

    சட்டசபை இடைத் தேர்தலிலும் அதிமுகவின் தோல்விக்கு அமமுகதான் காரணம். குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, அமமுக வாங்கிய ஓட்டுக்களைச் சேர்த்தால், திமுக தோல்வி அடைந்திருக்கும். இதுபோலத்தான் பல தொகுதிகளில் நிலவரம் உள்ளது.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    இதுபோதாதென்று நாம் தமிழர் கட்சி ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் தமிழர் கட்சி வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோலத்தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும்.

    2-ம் கட்ட தலைவர்கள்

    2-ம் கட்ட தலைவர்கள்

    இப்படி பல ரூபங்களில் போட்டிகள். ஜெயலலிதா இல்லாதது, பாஜகவின் பேச்சைக் கேட்டு எல்லாவற்றையும் செய்வது, மக்கள் மனதில் கடும் வெறுப்பை சம்பாதித்து வைத்திருப்பது, வாரிசுகளுக்கு மட்டும் சீட் கொடுத்தது என்று அதிமுக மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகியுள்ளது. இதை சரிசெய்ய ஒரே வழி அதிமுக - அமமுக இணைப்புதான் என்ற எண்ணம் தொண்டர்கள் அளவிலும் 2ம் கட்ட தலைவர்கள், எம்எல்ஏக்கள் மத்தியிலும் வந்துள்ளதாம்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    அமமுகவை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும். சசிகலாவை நம் பக்கம் அழைத்து வர வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழை எளிய மக்களின் அன்பை மீண்டும் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்திற்கு அதிமுக வந்துள்ளதாம்.

    ஒருங்கிணைப்பு

    ஒருங்கிணைப்பு

    ஆனால் தினகரன் மட்டும்தான் இந்த இணைப்புக்கு பெரும் இடையூறாக இருக்கிறதாம். தினகரனை சேர்க்க பலருக்கும் விருப்பமில்லை. ஆனால் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாம். பார்க்கலாம், அதிமுக ஒருங்கிணையுமா என்பதை.

    தமிழக நலன்

    தமிழக நலன்

    இவர்கள் இருவரும் ஒருங்கிணைவதை விட முக்கியமானது, பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு தமிழக மக்களின் நலன்கள், உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டால் இணைந்தாலும் கூட லாபம் இருக்காது... இப்போது கிடைத்த ரிசல்ட்தான் சட்டசபைத் தேர்தலிலும் கிடைக்கும் என்பதை அதிமுக நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

    English summary
    The AIADMK and AMMK are said to be together once again. However, TTV Dinakaran does not like this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X