சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நவீன சாணக்கியர் அமித் ஷா".. ஒரே போடாக போட்ட ஓ.பி.எஸ்.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி!

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்... இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று உறுதிபட ஓபிஎஸ் கூறி உள்ளதுடன், "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்று பேசியது மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்திருக்கிறார்.. ஏர்போர்ட்டில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

பின்னர், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி ஓபிஎஸ் சொன்னது இருக்கட்டும்.. எடப்பாடியார் போட்டாரு பாருங்க ஒரே போடுஅதிமுக-பாஜக கூட்டணி பற்றி ஓபிஎஸ் சொன்னது இருக்கட்டும்.. எடப்பாடியார் போட்டாரு பாருங்க ஒரே போடு

உறுதி

உறுதி

ரூ.900 கோடியில் வல்லூரில் இந்தியன் ஆயில் பெட்ரோலிய முனையத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார்.. இதைதவிர, ரூ.1400 கோடியில் அமுல்லைவாயிலில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தற்போது மீண்டும் உறுதியாகி உள்ளது.

 கூட்டணி

கூட்டணி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா, அமித்ஷாவிடம் என்ன பேசுவது என்பது தொடர்பாக சென்னையில் அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டமும் நடந்தது.. மேலும், தொகுதிகள், சீட் விவகாரம் குறித்து, அமித்ஷா பேசினால், அதற்கு என்ன பேசுவது என்றும் மா.செக்களிடம் கருத்துகளை முதல்வர், துணை முதல்வர் கேட்டறிந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இரு கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது.

உறுதி

உறுதி

இந்த விழாவில், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்... இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் உறுதிபட கூறியுள்ளார்.. ஒரு அரசு விழாவில் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளதும், "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்று ஓபிஎஸ் பேசியது மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முருகன்

முருகன்

ஆனால், எல். முருகன் ஏற்கனவே 60 சீட் கேட்டு வந்த நிலையில், பாஜகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு என்பது இதுவரை தெரியவில்லை.. அதேபோல, அதிமுக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளரை, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று ஏற்கனவே வானதி சீனிவாசனும், முருகனும் தெரிவித்திருந்த நிலையில், அது சம்பந்தமாகவும் இனிமேல்தான் தெரியவரும். அதேபோல, பாஜக, பாமக, தேமுதிக கட்சி நிர்வாகிகளும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், கடந்த முறை போலவே, இந்த முறையும் அதே கூட்டணியே தொடரும் என்பதும் நிரூபணமாகி உள்ளது!

English summary
AIADMK AND BJP Alliance-will continue says, O Panneerselvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X