சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவை ஒதுக்கி ஓரம் கட்ட பாஜக முடிவு.. செல்வாக்கை நிரூபிக்க களம் இறங்குகிறது!

உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார்?- வீடியோ

    சென்னை: அதிமுகவால் பட்ட பாடெல்லாம் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டதாம் பாஜக. வருகிற உள்ளாட்சித் தேர்லில் தனித்துப் போட்டியிட்டு நமது செல்வாக்கு என்ன என்பதை மக்களுக்கு நிரூபிப்போம் என்ற முடிவுக்கும் அது வந்து விட்டதாம்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை அப்படித் தாங்கிப் பிடித்தது பாஜககதான். பாஜக மட்டும் குறுக்கே பாய்ந்து அதிமுகவை அணை காத்து பாதுகாத்திருக்காவிட்டால், நிச்சயம் இந்நேரம் அதிமுக ஆட்சி கலைந்து போயிருக்கும். ஒன்று தேர்தல் வந்திருக்கும் அல்லது திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும்.

    ஆனால் இதெல்லாம் இல்லாமல் அதிமுகவை பாஜக அரவணைக்க அதன் சுயநலம்தான் முக்கியமாகும். அதிமுகை வைத்து தமிழகத்தில் ஏதாவது சாதிக்க நினைத்தது பாஜக. அதிமுகவால் பல காரியங்களை சாதிக்கவும் அது திட்டமிட்டது.

    ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெப்போ விகிதத்தில் 25 புள்ளி குறைப்பு! கடன் மீதான வட்டி குறையும் ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெப்போ விகிதத்தில் 25 புள்ளி குறைப்பு! கடன் மீதான வட்டி குறையும்

    மத்திய அரசு

    மத்திய அரசு

    ஆனால் அதிமுகவை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என நினைத்ததோ அது எதுவுமே நடந்தேறவில்லை. இதுதான் பாஜகவை அதிர வைத்து விட்டது. மத்திய அரசின் சில திட்டங்களை மட்டுமே தமிழகத்தில் அமல்படுத்த முடிந்ததே தவிர அது எதிர்பார்த்த ஆட்சி, அதிகாரம், எம்பி தொகுதிகள் என எல்லாவற்றிலுமே ஏமாற்றம்தான்.

    ஆய்வுகள்

    ஆய்வுகள்

    எம்பி தேர்தலில் அதிமுகவை வைத்து பெரிய பிளான் போட்டது பாஜக. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மொத்தமாக போண்டியாகி விட்டது. இதற்கு யார் காரணம் என்ற ஆய்வுகள் ஒருபக்கம் ஓடினாலும் கூட தமிழகத்தில் நிலவிய மோடி எதிர்ப்பு மற்றும் அதிமுக அரசு மீதான அதிருப்தி அலை என இரு பெரும் அலைகள்தான் மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    உள்ளாட்சி தோல்வி

    உள்ளாட்சி தோல்வி

    ஆனால் பாஜகவோ வேறு மாதிரியாக நினைக்கிறது. அதிமுகவால்தான் கவிழ்ந்தோம் என்பது அதன் எண்ணம். இதுதொடர்பாக அதுவே ஒரு சர்வேயை எடுத்து அதிமுகவால்தான் எல்லாம் போச்சு என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளது. இதனால் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் இந்த அவப் பெயரை துடைக்க அது முடிவு செய்துள்ளதாம்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப் போகிறதாம். அதிமுகவை கூட்டு சேர்க்கப் போவதில்லையாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என எல்லா இடத்திலும் போட்டியிடப் போகிறார்களாம். மிகப் பெரிய அளவில் இதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். இதில் நமது செல்வாக்கு என்ன என்பதை கண்டிப்பாக காட்டியாக வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக உள்ளதாம்.

    மேயர் பதவி

    மேயர் பதவி

    கோவை, திருப்பூர் மேயர் பதவிகளைப் பிடித்து விட வேண்டும் என்பதே இவர்களின் திட்டமாக உள்ளதாம். அதேபோல கவுன்சிலர் பதவிகளையும் கணிசமான அளவில் கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாம். நமது வாக்கு வங்கி சரியவில்லை என்றும் காட்ட பாஜக முனைப்புடன் உள்ளதாம். இதற்காக பூர்வாங்க வேலைகளிலும் அது இறங்கி விட்டதாக சொல்கிறார்கள்.

    அமித்ஷா

    அமித்ஷா

    இப்படி ஒட்டுமொத்தமாக மண்ணை கவ்வி உள்ள அதிமுகவை துாக்கி சுமக்க வேண்டிய அவசியம், பாஜகவுக்கு இல்லை என்பதுதான் அமித்ஷாவின் எண்ணமாக உள்ளது. இவங்ளை தூக்கி வெச்சு பாராட்டி புகழ்ந்து, ஓட்டுகேட்கிறதைவிட, பேசாமல், கடந்த கால மோடி அரசு செயல்படுத்தி திட்டங்களை மக்களிடம் சொல்லியே ஓட்டை வாங்கிவிடலாம் என்றும் பாஜக திட்டம் போடுகிறது. இப்படியெல்லாம் பண்ற பிளானை பார்த்தால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா, விரிசல் விழுமா, என்பது ஒரே குழப்பமாக உள்ளது!

    நக்கல் பேச்சு

    நக்கல் பேச்சு

    ஆனால் அதிமுகவினரோ, எங்க கூட இருந்ததால்தான் இந்த அளவுக்காவது ஓட்டு வந்துச்சு. எங்களை வேண்டாம் என்றால் நோட்டாவுடன்தான் பாஜக போட்டியிட வேண்டியிருக்கும் என்று நக்கலாக பேசி வருகிறார்களாம்.

    English summary
    It is not known whether the AIADMK coalition will continue until Local Body Elections. Because The AIADMK and the BJP are also said to be contesting alone to prove their strengths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X