சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபையில் அருமை.. அதிமுக- திமுக அடித்துக் கொண்டாலும்.. இந்த ஒரு விஷயத்தில் நல்ல ஒற்றுமை

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வை போல் நெக்ஸ்ட் தேர்வு விவகாரத்திலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நெகஸ்ட தேர்வை எதிர்த்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் பேசிய கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எழுதி எம்பிபிஎஸ் படித்து முடிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் வரும் ஆண்டு முதல் மருத்துவர் கனவை நினைவாக்க அகில இந்திய அளவில் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக புதிய மருத்துவ கழக மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவில் உள்ளது.

aiadmk and dmk opposes NEXT exam for MBBS final year students

மத்திய அரசின் நெக்ஸ்ட் தேர்வு அறிவிப்புக்கு எதிர்ககட்சி தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் நெக்ஸ்ட் தேர்வு விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் புதிய மருத்துவ கழக மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும். புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இதுவரை மாநிலங்கள் இயக்கி வந்த மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு இயக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை, எனவே அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்கள் இந்த ஆண்டு நெகஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்பதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் அளித்த பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நெக்ஸ்ட் தேர்வை அதிமுகவும் எதிர்ப்பதாக கூறினார். நெகஸ்ட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாக ஏற்கனவே அவையில் அதிமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது என்றார். நீட் தேர்வை போல் நெக்ஸ்ட் தேர்வு விவகாரத்திலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. என்னதான் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று இருந்தாலும் மாநில கூட்டாட்சி என்று வரும்போது ஒற்றுமையாக எதிர்ப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

English summary
aiadmk and dmk opposes 'NEXT' exam for mbbs final year students, Minister vijay baskar support mk stain speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X