சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை!

அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

    சென்னை: சவாரி ஏறியவர்களையும் கவிழ்த்து தானும் கவிழ்ந்து கிடக்கிறது அதிமுக கூட்டணி! இப்படி ஒரு அதிர்ச்சி அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் உறைந்து உள்ளனர்.

    அதிமுகவுடன் யார் கூட்டணி வைக்க போகிறார்கள் என்றுதான் முதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது முதல்முறையாக கொக்கி போட்டது பாஜகதான்!

    வலிய வந்து பேசியது, சிறு விஷயத்தையும் வலிய வந்து பாராட்டி சென்றது. இதற்கு காரணம், பாஜகவுடன் கூட்டணி வைக்க அப்போது யாருமே முன்வரவில்லை. இதனால் செல்வாக்கை உள்ளே புகுந்து தானாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியது பாஜக.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    பாமக

    பாமக

    நாட்டை ஆளும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தரப்பில் இங்கிருந்து டெல்லி சென்றவர்கள் குறைவுதான். பியூஷ்கோயல் மட்டுமே சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கும் பிள்ளையார் சுழி போட்டு சென்றார். இதையடுத்து, எதிர்பாராமல் ஏற்பட்டதுதான் பாமக கூட்டணி. அதற்கு சீட்டுகளை அள்ளி கொடுத்தது அதைவிட அதிக ஷாக்!

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ், யார் நிறைய சீட் தருகிறார்களோ, அவர்கள் பக்கம்தான் தாவுவார் என்பது கடந்த கால சமாச்சாரம்தான் என்றாலும் இதை என்னவோ யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த சமயத்தில் தேமுதிகவையும் உள்ளே இழுத்து போடுமாறு சொல்ல, வேறு வழியின்றி பணிந்தது அதிமுக! எங்கே போவது என்று தெரியாமல், கடைசியாக கூட்டணியில் நுழைந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சி

    இப்போது விளைவு.. அதிமுக என்ற ஆலவிருட்சம் இன்று சுருங்கி சுருண்டு விழுந்துவிட்டது. அதன் மீது ஏறி சவாரி செய்த கூட்டணி கட்சிகளும் மண்ணை கவ்வியது வரலாறு காணாதது! அதிலும் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அன்புமணி மீது தொகுதி மக்கள் நிறைய மதிப்பை வைத்திருந்தவர்கள்.

    அன்புமணி

    அன்புமணி

    தொகுதியின் அடிப்படைகளை குறையின்றி பூர்த்தி செய்தவர் அன்புமணி. இதில் சாதீய வாக்குகளும் உள்ளடக்கம் என்பதால், இவருக்கு வெற்றி என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதேதான் தேமுதிகவிலும்.. கள்ளக் குறிச்சியில் மட்டுமாவது சுதீஷ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்கு வித்தியாசமே இரண்டரை லட்சம் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.

    தமிழிசை

    தமிழிசை

    பாஜக என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தூத்துக்குடியில் தமிழிசை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார் என்பது நம்மால் கணிக்கப்பட்டதுதான். தென்காசியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமியும் பின்னடைவை சந்தித்து வருவதாக சொல்கிறார்கள்.

    மனநிலைமை

    மனநிலைமை

    இவ்வளவு பேரும் தோல்வியை நோக்கி செல்ல என்ன காரணம்? முரண்பட்ட கொள்கை முடிவுகள், எதிர்பாராத இடத்தில் கூட்டணி வைத்ததுதான்! அதனால் பலர் நல்ல வேட்பாளர்களாக, திறமையான வேட்பாளர்களாக இருந்தும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. கட்சி தலைவர்கள் சரியான முடிவை எடுக்க தவறியதே. தொண்டர்களின் மனநிலைமையை இவர்கள் யாருமே புரிந்து கொள்ளாததே.. அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியும் கற்றுக் கொண்ட பாடம்!

    2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!

    English summary
    The AIADMK and its Alliance Parties have suffered a big defeat in Election Result. The reason is that their coalition does not like people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X