சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரன் சொல்வது நகைப்புக்குரியது.. அமமுக "குள்ள நரி கூட்டம்.." "என்ட் கார்ட்" போட்ட ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒரு குள்ளநரி கூட்டம் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அமமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக 2 நாட்களாக பரவும் செய்திகளுக்கு இடையே ஜெயக்குமார் அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

பாஜக பாஜக "கேம் பிளான்.." திகுதிகுவென கிளம்பிய தகவல்.. சசிகலா வீட்டுக்கு விரைந்த தினகரன்.. என்ன நடந்தது?

பாஜக தலையிடாது

பாஜக தலையிடாது

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டுமா, என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உங்களுக்கு நெருக்கடி கொடுத்தாரா? என்ற நிருபர்கள் கேள்விக்கு, "நீங்கள் கூட உட்கார்ந்து இருந்தீர்களா.. இது முற்றிலும் தவறான தகவல். அதிமுக உள்விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது கிடையாது." என்றார் ஜெயக்குமார்.

நகைப்புக்குரியது

நகைப்புக்குரியது

மேலும் அவர் கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் வேண்டுமானால் அதிமுக வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது எள்ளி நகையாடும் ஒரு விஷயம்.

குள்ள நரி கூட்டம்

குள்ள நரி கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குள்ளநரி கூட்டம். ஆனால் அதிமுக சிங்கங்கள். இரண்டும் கூட்டணி வைக்க முடியாது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது கிடையாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். அந்த நிலையில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

என்ட் கார்டு போட்ட ஜெயக்குமார்

என்ட் கார்டு போட்ட ஜெயக்குமார்

இதன்மூலம் கடந்த சில நாட்களாக ஆறாக பெருகி அருவியாக ஓடி வந்த, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக கூட்டணி போன்ற செய்திகள் முடிவுக்கு வந்துள்ளன. இதுபோன்ற தகவல்களை இதுவரை அதிமுக மறுக்காமல் திடீரென மறுத்துள்ளது. சசிகலா தரப்பை குழப்பத்தில் வைத்திருக்க பாஜக செய்த கேம்பிளான்தான் கூட்டணி பற்றிய தகவல்கள் என்றும் கூறப்படுகிறது.

English summary
AIADMK will not make an alliance with Amma Makkal munnetra Kazhagam says, minister Jayakumar on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X