சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் ஒவ்வொன்றுக்கும் தனி குழு.. தேர்தல் அறிக்கை குழுவில் யார் யார்? ஒபிஎஸ்-இபிஎஸ் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் 2021ல் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம் ஆகும் விதமாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுவை அதிமுக தலைமை அறிவித்துள்ளது

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், செங்கோட்டையன் உள்பட 11 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரக்குழுவில் தம்பித்துரை, வைகை செல்வன், இளங்கோவன் இடம் பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் தங்கமணி உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்
எதிர்க்கட்சிகளுக்கு அறிக்கைக்கு பதில் அளிக்கும் குழுவில் ஜெயக்குமார் உள்பட 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்கண்டவாறு குழுக்கள் அமைக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரக் குழு

தேர்தல் பிரச்சாரக் குழு

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் மணியன், கோகுல இந்திரா, ஜேசிடி பிரபாகர், அன்வர் ராஜா, வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரக் குழுவில், மு.தம்பிதுரை, வைகைசெல்வன், இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜெயக்குமார், தங்கமணி

ஜெயக்குமார், தங்கமணி

செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் காமராஜ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வைகை செல்வன், பரமசிவம் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன்

எதிர்க்கட்சிகளின் அறிக்கைக்கு பதிலளிக்கும் குழுவில், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் ஜெயக்குமார், செம்மலை, அமைச்சர் விஜயபாஸ்கர், வைகை செல்வன், ரபி பெர்னார்ட், மருது அழகு ராஜ், பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒபிஎஸ் இபிஎஸ் வேண்டுகோள்

ஒபிஎஸ் இபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக ரபி பெர்னார்ட் மற்றும் மருது அழகுராஜ் நியிமிக்கப்பட்டுள்ளனர். இணை ஒருங்கிணைப்பாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு ழுழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

English summary
The AIADMK has announced a committee to carry out election work in preparation for the forthcoming assembly elections in Tamil Nadu in 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X