"ஒரே கல்லுல 2 மாங்காய்".. டபுள் மீனிங்கில் பேசுகிறார் ஸ்டாலின்.. குண்டை தூக்கி போட்ட அதிமுக அப்சரா!
சென்னை: "கிராம சபை கூட்டங்களில் ரெட்டை அர்த்தத்துல நிறைய பேசறார் ஸ்டாலின்... ஒரே கல்லுல நிறைய மாங்காய் அடிச்சிட்டோம்னு சொல்றது? இவ்ளோ பெண்களை பார்க்கறது சந்தோஷமா இருக்குன்னு சொல்றது? என்ன இதெல்லாம்? அந்த கட்சியில் இருக்கிறவங்களுக்கு பெண்களை சுத்தமா மதிக்க தெரியாது" என்று அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவின் செயல்திட்டங்களை விரிவாக எடுத்து கூறியதுடன், திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. அப்போது அப்சரா ரெட்டி திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசியது இது:

ஸ்டாலின்
"கிராம சபையை ஸ்டாலின் நடத்திட்டு வர்றாரு.. கிராம சபையில் மொத்தமா திமுக உறுப்பினர்களையே உட்கார வைக்க ட்ரை பண்றார்.. ஏன் பாமர மக்கள் அவரை கேள்வி கேட்க கூடாதா? ஏன் மகளிர் அவங்க பிரச்சனையை பேசக்கூடாதா? கிராம சபையில் ஒவ்வொருத்தரின் பிரச்சனையை அறிந்து அதற்கு பதில் சொல்லணும்.. குண்டர்களை வெச்சு பெண்களை தாக்குறது ஏன்?

இரட்டை அர்த்தம்
ஒரே கல்லுல நிறைய மாங்காய் அடிச்சிட்டோம்னு சொல்றது? இவ்ளோ பெண்களை பார்க்கறது சந்தோஷமா இருக்குன்னு ரெட்டை அர்த்தத்துல நிறைய பேசறார் ஸ்டாலின். அந்த கட்சியில் இருக்கிறவங்களுக்கு பெண்களை சுத்தமா மதிக்க தெரியாது..

உதயநிதி
அதே மாதிரி உதயநிதி நம்ம முதல்வரை கீழ்த்தரமா பேசறார்.. உதயநிதி அவங்க தாத்தா போட்ட பிச்சையில், அப்பா போட்ட பிச்சையில் மேடை ஏறி பேசறார்.. இந்த வாரிசு அரசியல் மட்டும் இல்லேன்னா இன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் எங்கே இருப்பார்? ஒருகால கட்டத்தில், அப்பா முதலமைச்சர், மகன் துணை முதல்வர், மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், உலகத்துல எங்காவது இப்படி நடக்குமா?

கண்டிப்பு
உதயநிதி பேசும் இடங்களில் மக்களே பதிலடி தருவார்கள்? அவர் என்ன எல்லா ஆண்களையும் அவங்க அப்பா, தாத்தா மாதிரி நினைச்சுட்டாரா? எப்படி முதல்வரை தவறாக பேசலாம்? கவர்ச்சியாக பேசலாம்? இதெல்லாம் கண்டிக்கக்கூடிய விஷயங்கள்.. அதிமுகதான் இந்த முறை வெற்றி பெறும் பார்த்துட்டே இருங்க..!" என்றார். கடந்த சில தினங்களாகவே உதயநிதியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் குறித்து அப்சரா பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.